அலுவலகத்திற்கு தினமும் சென்று வர ஏற்ற சிறந்த 5 கார்களின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் ரேஞ்ச்/ மைலேஜ் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement
  1. எம்.ஜி.கோமெட்இவி (MG Comet EV)
  • வடிவமைப்பு: இது 3 கதவுகள் கொண்ட தனித்துவமான பாக்ஸி டிசைனைக் கொண்டுள்ளது.
  • கட்டமைப்பு: மிகச் சிறிய உருவம் கொண்டதால், நெரிசலான நகரப் போக்குவரத்தில் ஓட்டுவதற்கும் சிறிய பார்க்கிங் இடங்களுக்கும் மிகவும் ஏற்றது.
  • ரேஞ்ச்: ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் வழங்குகிறது.
  1. டாடாடியாகோஇவி (Tata Tiago EV)
  • வடிவமைப்பு: வழக்கமான ஹேட்ச்பேக் அமைப்பில் நேர்த்தியான டிசைனைக் கொண்டுள்ளது.
  • கட்டமைப்பு: 5 பேர் அமரக்கூடிய வசதியான உட்புறம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பிராக்டிகலான வடிவம் கொண்டது.
  • ரேஞ்ச்: பேட்டரி தேர்வுக்கு ஏற்ப, ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ முதல் 315 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது.
  1. மாருதிசுஸுகிஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)
  • வடிவமைப்பு: ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் ஏரோடைனமிக் டிசைன்.
  • கட்டமைப்பு: ஓட்டுவதற்கு எளிதான ஹேட்ச்பேக் கட்டமைப்பு மற்றும் சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது.
  • மைலேஜ்: தினசரி பயணங்களுக்கு ஏற்ற வகையில் லிட்டருக்கு8 கி.மீ முதல் 25.75 கி.மீ வரை சிறப்பான மைலேஜ் வழங்குகிறது.
  1. டாடாபஞ்ச் (Tata Punch)
  • வடிவமைப்பு: தடித்த பம்பர்களுடன் கூடிய கம்பீரமான மைக்ரோ எஸ்.யு.வி டிசைன்.
  • கட்டமைப்பு: அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும் எளிதாகப் பயணிக்கலாம்.
  • மைலேஜ்: பெட்ரோல் மாடல்09 kmpl வரையிலும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 26.99 கி.மீ வரையிலும் மைலேஜ் தருகிறது.
  1. ஹூண்டாய்எக்ஸ்டர் (Hyundai Exter)
  • வடிவமைப்பு: H-வடிவ எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய நவீன மற்றும் பாக்ஸி எஸ்.யு.வி டிசைன்.
  • கட்டமைப்பு: உட்புறத்தில் அதிக இடவசதி மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
  • மைலேஜ்: பெட்ரோல் மாடல்4 kmpl மற்றும் சிஎன்ஜி மாடல் 27.1 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.

செலரியோ மற்றும் ஆல்டோ கே10

தினசரி பயன்பாட்டுக்கும் டாப்பான மைலேஜுக்கும் மாருதி சுஸுகி பெஸ்ட் ஆப்ஷன். மாருதி செலரியோ மற்றும் ஆல்டோ கே10 இதில் சிறப்பான இடத்தை வகிக்கின்றன.

Continues below advertisement

இவற்றின் காம்பாக்ட் அளவு, ட்ராஃபிக்கிலும் குறுகிய தெருக்களிலும் எளிதான பயணத்தைக் கொடுக்கின்றன. இவை ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் 24 முதல் 25 கி.மீ. மைலேஜை அளிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI