Best Cars Under 5 Lakhs: ரூ. 5 லட்சத்தில் கார் வாங்கணுமா? இந்தியாவில் உங்களுக்கு இருக்கும் சாய்ஸ் என்ன?

Best Cars Under 5 Lakhs in India: இந்திய ஆட்டோமொபல் சந்தையில் 5 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

Best Cars Under 5 Lakhs in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போதைய சூழலில், வெறும் 3 கார்கள் மட்டுமே 5 லட்ச ரூபாய்க்குள் விற்பனையாகிறது.

Continues below advertisement

கார் வாங்கும் ஆசை:

நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மோட்டார்சைக்கிள் என்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது. ஆனால், அவர்களின் பட்ஜெட்டிற்குள் கார் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதோடு, மிக சொற்பமான ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 5 லட்ச ரூபாய் என்ற பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் படி, தற்போதைய சூழலில் இந்தியாவில் 3 கார்கள் மட்டுமே 5 லட்ச ரூபாய்க்குள் (எக்ஸ் ஷோ-ரூம் விலை அடிப்படையில்) விற்பனை செய்யப்படுகின்றன.

Maruti Suzuki Alto K10:

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ K10  மாடலின் தொடக்க விலை 3 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோ-ரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்திய சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கார் மாடல் இது தான்.  இதில் இடம்பெற்றுள்ள 1-லிட்டர் இன்ஜின் 66bhp மற்றும் 89Nm ஆற்றலை வெளிப்படுத்தும்.  5-ஸ்பீட் AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் லிட்டருக்கு 24.90 கிமீ எனும் மைலேஜ் வழங்குகிறது.  இரட்டை ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் விநியோகத்துடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Maruti Suzuki S-Presso:

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு கார் மாடலான எஸ்-பிரெஸ்ஸோ மாடலின் தொடக்க விலை, 4 லட்சத்து 26 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோ-ரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்புபவர்களுக்கான முதன்மையான தேர்வாக இதுவாக இருக்கும். Alto K10 இல் உள்ள அதே 1-லிட்டர் இன்ஜின் இதிலும் இடம்பெற்றுள்ளது. அதே மாதிரியான ஆற்றல் புள்ளிவிவரங்களையும், 5 ஸ்பீட் AMT-யயும் கொண்டுள்ளது. நிறுவனத்தின்  கூற்றுப்படி, ஒரு லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் வழங்கும். S-Presso மேம்பட்ட ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ESP,  இரட்டை ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் விநியோகத்துடன் கூடிய ஏபிஎஸ் போன்ற பதினொன்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Renault Kwid:

ரெனால்ட் நிறுவனத்தின் கிவிட் மாடல் கார் தான் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், 5 லட்ச ரூபாய் என்ற பட்ஜெட்டில் கிடைக்கும் கடைசி பட்ஜெட் ஆகும். இந்த மாடலின் தொடக்க விலை 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோ-ரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 67 bhp ஆற்றல வெளிப்படுத்துகிறது. ரெனால்ட் நிறுவன கூற்றுப்படி, இந்த வாகனம் ஒரு லிட்டருக்கு 22.3 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இது டிரைவ் மோடுகளுக்கான ரோட்டரி டயலுடன் வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஷ்டம், டயர் ப்ரெஷன் கண்காணிப்பு அமைப்பு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் இரண்டு ஏர்பேக்குகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

ALSO READ | Best SUV Under 10 Lakh: தீபாவளிக்கு எஸ்யுவி கார் வாங்குறீங்களா? ரூ.10 லட்சம் பட்ஜெட்டா? - உங்களுக்கான சாய்ஸ் இதோ

Continues below advertisement
Sponsored Links by Taboola