இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

Bajaj Pulsar N125:

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழும் பஜாஜ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக திகழ்வது Bajaj Pulsar N125. இதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Bajaj Pulsar N125 - Pulsar N125 Disc - Bluetooth - ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 999 

2. Pulsar N125 LED Disc - ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 165

மைலேஜ்:

இந்த பைக் கருப்பு, சாம்பல் - பச்சை, கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 124.58 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 125 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 795 மி.மீட்டர் ஆகும்.

இந்த பைக்கில் 9.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இது 60 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 570 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 11 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 100 கி.மீட்டர் வேகத்தில் செல்கிறது.

வாரண்டி:

5 கியர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கியர் கீழேவும் 4 கியர் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் டேங்கர் 1.5 லிட்டர் ஆற்றல் கொண்டது.  75 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. ப்ளூடூத், ஜிபிஎஸ் - நேவிகேஷன் வசதி கொண்டது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது.

லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது.

கில் சுவிட்ச், ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி உள்ளது. சைலண்ட் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலே எரியும் விளக்குகள் கொண்டது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI