உலகிலேயே முதல் CNG மோட்டார் பைக் பஜாஜ் ஃப்ரீடம் 125 என்பதால் இந்த பைக்குக்கு போட்டி இல்லை என கூறப்படுகிறது


பஜாஜ் ஃப்ரீடம் 125:


பஜாஜ் மோட்டார் நிறுவனமானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சிஎன்ஜி மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஃப்ரீடம் 125 ஐ வெளியிட்டது. பைக்கின் விலை எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 95,000 ஆக ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.




மேலும், இந்த பைக்கின் மூன்று பதிப்புகள் உள்ளன, டாப்-எண்ட் விலை ரூ. 1.10 லட்சம் ஆக உள்ளது.  ஃப்ரீடம் 125 ஆனது 125சிசி இன்ஜின் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி டேங்க்கை கொண்டுள்ளது. சிஎன்ஜி மூலம் 213 கிமீ மைலேஜ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தனியே 2 லிட்டர் கொள்ளளவிலான பெட்ரோல் எரிபொருளை பயன்படுத்தும் வகையிலான டேங்க்கும், அவசரகால பயன்பாடாக உள்ளது. ஆகையால் மொத்த மைலேஜ் 330 கி.மீ எனவும் தெரிவிக்கப்பட்ட்ள்ளது.   பவர் 9.5 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கில் வருகிறது.


வடிவமைப்பு:


CNG டேங்க், அமரும் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அடுக்கு உள்ளது. பொதுவான ஃப்யூல் கேப் கவர் மூலம் பயணத்தின்போதே மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பானது ஒரு வட்ட ஹெட்லேம்ப்பை கொண்டுள்ளது.




சிறப்பம்சங்கள்:


இதில் ப்ளூடூத், ரிவர்ஸ் எல்சிடி கன்சோல் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


மற்ற மோட்டார் சைக்கிள்களான ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக்குகளுடன் ஒப்பிடும் போது, ​​வாங்குபவரின் செலவைக் குறைப்பதை இந்த மோட்டார்சைக்கிள் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகிலேயே முதல் CNG மோட்டார்சைக்கிள் என்பதால் இந்த மோட்டார்சைக்கிளுக்கு போட்டி இல்லை. நாம் இதுவரை சிஎன்ஜி கார்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இது புதியது மற்றும் மற்ற மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் குறைந்த விலையைக் கொண்டிருக்கிறது.          




Car loan Information:

Calculate Car Loan EMI