இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ். இவர்களது இரு சக்கர வாகனங்களுக்கு எப்போதும் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இவர்கள் சிஎன்ஜி-யிலே ஓடும் வகையில் தயாரித்த முதல் பைக் Bajaj Freedom.
Bajaj Freedom:
சிஎன்ஜி-யிலே இயங்கும் இந்த Bajaj Freedom பைக்கின் மைலேஜ், விலை, தரம் குறித்து கீழே காணலாம்.
இந்த Bajaj Freedom பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 037 ஆகும்.
1. Bajaj Freedom Drum:
இந்த Bajaj Freedom Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 037. இதில் ட்ரம் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹாலோஜன் விளக்குகளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த Bajaj Freedom Drum பைக் கருஞ்சிவப்பு மற்றும் சாம்பல் மஞ்சள் நிறத்தில் சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
2. Freedom Drum LED:
பஜாஜ் நிறுவனத்தின் Freedom Drum LED பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரத்து 102 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் கருஞ்சாம்பல், சாம்பல் நிறம் நீலம் கலந்த கலவை உள்பட 5 வண்ணங்களில் உள்ளது. இந்த வேரியண்டில் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதிகள் கிடையாது.
3. Freedom Disc LED:
பஜாஜின் இந்த Freedom Disc LED பைக் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 154 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் வசதி இதில் உள்ளது. இந்த வேரியண்ட் மொத்தம் 4 வண்ணங்களில் உள்ளது.
மைலேஜ் எப்படி?
இந்த Bajaj Freedom பைக் 125 சிசி திறன் கொண்டது. இது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த வாகனம் 149 கிலோ எடை கொண்டது. இதில் 5 கியர்கள் உள்ளது. 1 கியரை கீழேவும், அடுத்தடுத்த கியரை மேலேவும் இயக்க வேண்டும். அதிகபட்சமாக மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
சிறப்புகள்:
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் உள்ளது. பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் வசதி உள்ளது. 5 வருடம் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி வசதி கொண்டது. எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது.
Car loan Information:
Calculate Car Loan EMI