இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் வெளியிட்ட வாகனங்களில், பல்சர் வகை பைக்குகள் மிகவும் பிரபலமானது என்பதோடு, விற்பனையில் பெரும் சாதனையும் படைத்துள்ளன. சிறந்த இன்ஜின் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கக் கூடிய அளவிலான விலை ஆகியவை, பல்சர் பைக்கிற்கு கிடைத்த பெரும் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அந்த தொடர் வெற்றியின் காரணமாகவே அண்மையிலும், 125cc செக்மெண்டில் விற்பனை செய்யப்படும் பல்சர் 125 பைக்கில், புதிய கார்பன் பைபர் எடிஷன் ஒன்றை பஜாஜ் நிறுவவனம் வெளியிட்டது.


பல்சர் கார்பன் பைபர் எடிஷன்:


சிங்கள் சீட் மற்றும் ஸ்ப்ளிட் சீட் என ரெண்டு ஆப்ஷன்களிலும்  கிடைக்கும் அந்த பைக்கின், சிங்கள் சீட் மாடல் தொடக்க விலை ரூ.89,254 எனவும், ஸ்ப்ளிட் சீட் விலை ரூ. 91,642 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11.64 குதிரை சக்தி, 10.80Nm  இழுவிசை திறனுடன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தனது புதிய பைக் மாடலை நாளை மாலை 4 மணியளவில் வெளியிட உள்ளதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்தது


நாளை அறிமுகமாகிறது புதிய பல்சர்?:


புதிய பைக் மாடலின் பெயர் மற்றும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், புனேவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் பல புதிய பைக் மாடல்கள் வடிவமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அடுத்து வர இருக்கும் புதிய மாடல் எதுவென துல்லியமாக தெரியாத நிலையில்,  150cc திறன் கொண்ட புதிய பல்சர் பைக் மாடல் தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்சர்  N150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட வகை பைக்காக, புதிய பல்சர் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. ஓநாயின் கண்ணை போன்ற அமைப்பை கொண்ட முகப்பு விளக்குடன், பல்சர் LS135 மாடலில் இருந்த மாதிரியான எரிபொருள் டாங்க் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


புதிய பல்சர் மாடலின் விலை என்ன?:


அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய டயர்களுடன், பல்சர் 250 மாடலில் இருந்த சேஸ்ஸின் அடிப்படையில் புதிய பைக்கின் சேஸ் இருக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1.10 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பது புதிய பல்சர் பைக் ஆக இருப்பின், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் யமாஹா FZ V3, சுசுகி ஜிக்சர் 155, டிவிஎஸ் அபாச்சி RTR 160 2V மற்றும் ஹோண்டா யூனிகார்ன், ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Car loan Information:

Calculate Car Loan EMI