இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இ ஸ்கூட்டர்களும், இ பைக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Avore EX1:
இந்த நிலையில், இந்திய சந்தையில் புதியதாக அறிமுகமாகியிருக்கும் இ பைக் Avore EX1. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.
மைலேஜ்:
இந்த இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 111. இதில் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. இதன் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும்.
யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. இந்த Avore EX1 இ பைக் சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் உள்ளது. அதிகபட்சமாக 250 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. பிஎம்எஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் ஆகும்.
சிறப்புகள்:
சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. மோனாேஷாக் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ பைக் 145 கிலோ எடை கொண்டது.
இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். 180 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. 5 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது.
வசதிகள்:
லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச், ஹில் சுவிட்ச் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.
பகலில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும். ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI