இந்தியாவில் மின்சார பைக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னணி நிறுவனங்களும் புதிய புதிய நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continues below advertisement

Avore EX2:

இந்த நிலையில், இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பில் காலடி எடுத்து வைத்துள்ள நிறுவனம் Avore. இ பைக் நிறுவனமான இந்த நிறுவனம் நேற்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள இ பைக் Avore EX2. 

255 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 598. இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் உள்ளது. இந்த பைக்கில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 255 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

Continues below advertisement

இதை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் வரை ஆகிறது.  இதன் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். யுஎஸ்பி சார்ஃஜிங் முன்பக்கம் உள்ளது. இந்த இ பைக் சாம்பல் - வெள்ளை, வெள்ளை - சிவப்பு, வெள்ளை - நீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்கள் இந்த பைக்கில் உள்ளது. பிஎம்எஸ்எம் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது.  சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் வசதி உள்ளது.

முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 154 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் ஆகும். 5 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.  3 வருடம் வரை மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது.

வசதிகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி பார்க்கிங் வசதியுடன் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் உள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் உள்ளது.

ஹாலோஜன் முகப்பு விளக்குகள் உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது. சிக்னல் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI