இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது வரலாறு காணாத புதிய விற்பனைச் சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்திய நிதியாண்டில், ஒட்டுமொத்த வாகனங்களின் விற்பனை 28 மில்லியனைக் கடந்துள்ளது.
அதாவது 2.8 கோடி என்ற பிரம்மாண்டமான மைல்கல்லைக் கடந்து மாபெரும் வளர்ச்சியை வாகன துறை பதிவு செய்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான நிலையைக் காட்டுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.4 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த அபார வளர்ச்சிக்கு அனைத்து வகையான வாகனப் பிரிவுகளின் பங்களிப்பும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
- இருசக்கரவாகனங்கள் விற்பனை: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முதுகெலும்பாக விளங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 10.7சதவீதம் அதிகரித்து 2.17 கோடி வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கிராமப்புற சந்தைகளில் பணப்புழக்கம் மேம்பட்டதால் இதன் விற்பனை சூடுபிடித்துள்ளது.
- கார்கள்: மக்களிடையே கார்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, எஸ்.யு.வி மாடல் கார்களுக்கான மவுசு முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
- வர்த்தகமற்றும் 3 சக்கரவாகனங்கள்: நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக, வர்த்தக வாகனங்களின் விற்பனையும் சிறப்பாக உள்ளது. இது 12.6 சதவீதம் அதிகரித்து, 1.07 கோடி வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. மறுபுறம், மின்சார ஆட்டோக்களின் வரவால் 3 சக்கர வாகன விற்பனையும் ஏற்றம் கண்டுள்ளது.
என்னகாரணங்கள்?
நிலையான பொருளாதார வளர்ச்சி, மக்களின் தனிநபர் வருமானம் மற்றும் வாங்கும் திறன் அதிகரிப்பு, வங்கிகள் வழங்கும் எளிதான வாகனக் கடன்கள் ஆகியவை இந்த விற்பனைச் சாதனைக்கு வித்திட்டுள்ளன. மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் காட்டும் ஆர்வமும், அரசின் சலுகைகளும் இத்துறைக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2.8 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆட்டோமொபைல் துறைக்கு மட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கும் மிகப் பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாகும். வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சி விகிதம் புதிய உச்சங்களைத் தொடும் எனத் துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI