எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் 93.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் உமாங் செயலியில் https://umangresults.digilocker.gov.in/CBSE10thX2026lmkpoiytaz.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். 

டிஜி லாக்கர் செயலியிலும் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. https://results.digilocker.gov.in/CBSE10th2026tenthXbzvbkajsgqw.html என்ற இணைப்பை க்ளிக் செய்தும் 10ஆம் வகுப்பு தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அறியலாம். 

காண்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய முடியும். 

CBSE உடன் இணைக்கப்பட்ட APAAR ID உள்ள மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலை டிஜிலாக்கரில் நேரடியாகப் பெறலாம். APAAR ID இல்லாதவர்கள், அதே போர்ட்டலில் தங்களின் பள்ளிக் குறியீடு, ரோல் எண் மற்றும் 6-இலக்க குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்க வேண்டியது முக்கியம்.

டிஜிலாக்கரில் முடிவுகளைப் பதிவிறக்குவது எப்படி?

cbseservices.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ DigiLocker இணையதளத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில், "Go To Result" என்பதைக் கிளிக் செய்து, "CBSE Xth Result 2026" என்பதன் கீழ் "View Result" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

உங்கள் மதிப்பெண் பட்டியலைக் காண "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.

அல்லது https://results.digilocker.gov.in/CBSE10th2026tenthXbzvbkajsgqw.html  என்ற இணைப்பில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

இணையதளங்களில்..

மாணவர்கள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களான

  • results.cbse.nic.in
  • cbse.gov.in
  • results.nic.in
  • results.digilocker.gov.in
  • umang.gov.in
  • cbse.nic.in

 ஆகியவற்றை க்ளிக் செய்து அறியலாம்.

பொதுத்தேர்வு நடந்தது எப்போது?

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. பிப்.17ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 11 வரை நடைபெற்றது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். 10ஆம் வகுப்பு தேர்வை மட்டும் 25 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 15) வெளியாகி உள்ளன. மாணவர்கள் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். 

முன்னதாக 2025ஆம் ஆண்டு 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி அன்று ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.