Audi S5 Sportback: இந்திய சந்தையில் புதியதாக ஆடி கார் நிறுவனத்தின் S5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எனும்,  ஸ்பெஷல் எடிஷன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Audi S5 Sportback ஸ்பெஷல் எடிஷன்:


ஆடி கார் நிறுவனம் தனது S5 ஸ்போர்ட்பேக் செடானின் புதிய பிளாட்டினம் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு, விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஸ்பெஷல் எடிஷன் வெளியாகியுள்ளது. எனவே, இந்த எடிஷன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்கள் வரை மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே Q5 மற்றும் Q8 ஆகிய மாடல்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்த ஆடி நிறுவனம், அதன் வரிசையில் மூன்றாவதாக S5 ஸ்போர்ட்பேக்கின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.


விலை விவரங்கள்:


ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனுக்கு சொந்தமான ஆடி வாகன பிராண்டின் விலை, இந்திய சந்தையில் 81 லட்சத்து 57 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள S5 ஸ்போர்ட்பேக்கை விட. பிளாட்டினம் எடிஷனின் விலை ரூ.5.83 லட்சம் அதிகம் ஆகும். விருப்பமுள்ள நபர்கள் ஆடியின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களில் தங்களுக்கான வாகனத்தை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


S5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனில் ரெகுலர் மாடலில் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் அமைப்பு தான் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 3.0 லிட்டர் V6 பெட்ரோல் இன்ஜின் மூலம், 8 ஸ்பீட் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆடியின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது. அதிகபட்ச ஆற்றல் மற்றும் டார்க் ஆக 349 bhp மற்றும் 500 Nm திறனை வெளிப்படுத்துகிறது.  S5 ஸ்போர்ட்பேக் 0-100kph  வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டி விடும்.


சிறப்பம்சங்கள்:


ஸ்பெஷல் எடிஷன் செடானில் மேம்பட்ட 10.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (அனைத்து வயர்லெஸ் கார் இணைப்பு தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது), மூன்று-மண்டல காலநிலை கட்டுப்பாடு, குரல் கட்டுப்பாட்டுடன் இலவச உரை-தேடல் செயல்பாடு, 12.2-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பல தனிப்பயனாக்கக்கூடிய காட்சி முறைகள், 10 ஸ்பீக்கர்கள் மற்றும் 180 W சவுண்ட் சிஸ்டம்  போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுளன. ஆடியின் ஸ்போர்ட்ஸ் சீட்ஸ் பிளஸ், மசாஜ் செயல்பாடு,லேசர், லைட் தொழில்நுட்பத்துடன் கூடிய மேட்ரிக்ஸ் எல்ஈடி முகப்பு விளக்குகள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மைதோஸ் பிளாக் எனும் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.  தற்போது, ​​ஆடி S5 ஸ்போர்ட்பேக் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளராக இருப்பது BMW M340i  மாடல் மட்டுமே. இதன் விலை ரூ. 71.50 லட்சம் ஆகும். 


ஆடி நிறுவனம் நம்பிக்கை:


ஸ்பெஷல் எடிஷன் தொடர்பாக பேசியுள்ள ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லியன் கார்வேல்,  ”பண்டிகைக் காலத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இந்நேரத்தில் ஆடி S5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஓட்டுநர் அனுபவத்தை உயர்த்த வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன். இந்த பண்டிகைக் காலத்தில் இது எங்களின் மூன்றாவது சிறப்புப் எடிஷன்.  இவை அனைத்தும் அறிமுகமானதும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.


Car loan Information:

Calculate Car Loan EMI