Affordable EV List: டெல்லியில் காற்று மாசுபாடு அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலை மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு:


டெல்லியில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக GRAP-IV மாசு கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான விதிகள் அமலுக்கு வந்துள்ளன. டெல்லி தொடர்ந்து புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் அதே வேளையில்,


வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு மற்றும் எதிர்காலத்தில் அதைக் குறைக்கும் மின்சார வாகனங்களின் பங்கு குறித்தான விவாதமும் அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பிற சிக்கல்கள் இன்னும் அதிகமான EV பயன்பாடுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அதிக தேர்வுகள் காரணமாக உள்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிட்து வருகிறது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் மலிவு விலை மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



மலிவு விலை மின்சார கார்கள்:


1. எம்ஜி காமெட்


சிறிய MG காமெட் ஒரு நகர்ப்புறத்திற்கான அம்சங்களுடன், பார்க்கிங் பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழி என்பதால் இதை விட மலிவான EV ஐ உங்களால் பெற முடியாது. எம்ஜி காமெட் விலைகள் BAAS திட்டத்தின் கீழ் ரூ. 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன, அதாவது பேட்டரி விலையைத் தவிர்த்து இது வழக்கமான ஹேட்ச்பேக்குகளை விட குறைவான விலையில் உள்ளது. நிச்சயமாக, இந்த திட்டம் இல்லாமலும் காமெட் கிடைக்கிறது.  17.3 kwh பேட்டரி பேக்குடன் 230 கிமீ என்ற சுவாரஸ்யமான ரேஞ்சையும் கொண்டுள்ளது.


2. டாடா டியாகோ EV:


Tiago EV மிகவும் மலிவான EV 5 டோர் ஹேட்ச்பேக் ஆகும். இதன் விலை ரூ.6.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. Tiago EV என்பது டியாகோவின் மின்சார எடிஷன் மட்டுமே. சந்தையில் இதன் இடம், செயல்திறன் மற்றும் அது கிடைக்கும் விலையின் காரணமாக மிகவும் வெற்றிகரமாக உள்ளது. என்ட்ரி லெவல் மாடல்கள் உங்களுக்கு 250 கிமீ வரம்பை வழங்கும்.  மேலும் சக்திவாய்ந்த 24 கிலோவாட் பேட்டரி பேக் எடிஷன் 315 கிமீ வரம்பைக் கொண்டு வருகிறது. காருக்கான அம்சங்களின் பட்டியலையும் டாடா தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.


3. சிட்ரோயன் eC3:


Citroen C3 ஹேட்ச்பேக்கின் மின்சார எடிஷனான eC3 ஆனது 29.2 kWh பேட்டரி பேக்குடன், 320 கிமீ வரம்பை வழங்குகிறது. இதன் விலை 11.6 லட்சத்தில் தொடங்குகிறது. எஸ்யுவி போன்ற ஸ்டைலிங்  மற்றும் இந்த அளவிலான ஹேட்ச்பேக் வடிவத்தில் வழங்கும் ரேஞ்ச் ஆகியவை இந்த காரில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.


எம்ஜி விண்ட்சர்:


வின்ட்சர் JSW MG இன் சமீபத்திய மின்சார வாகனமாகும். அதே நேரத்தில் பேட்டரி வாடகைத் திட்டத்துடன், Windsor விலை ரூ. 10 லட்சத்தில் (ரூ. 9.99 லட்சம்) இருந்து தொடங்குகிறது . வின்ட்சர் ஒரு மின்சார தளத்தை அடிப்படையாகக் கொண்டது, அதாவது 38 kwh பேட்டரி பேக்குடன் 331 கிமீ வரம்பில், ஒரு தட்டையான தரையுடன் நல்ல இட வசதியும் கொண்டுள்ளது. வின்ட்சர் பின்புற இருக்கைகள், 15.6 அங்குல தொடுதிரை மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.


டாடா பஞ்ச்:


பஞ்ச் EV ஆனது புதிய Acti.EV ஆர்கிடெக்ட்சரில் அமர்ந்திருக்கிறது. பஞ்ச் EVக்கான விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. அதே சமயம் 25 மற்றும் 35kwh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. வரம்பு 315 கிமீ முதல் 421 கிமீ வரை மாறுபடும். 360 டிகிரி கேமரா, காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் இரட்டை 10.25-இன்ச் திரைகள் உட்பட வழங்கமான பஞ்ச் மாடலை காட்டிலும், பல அம்சங்களைக் கொண்ட மிகவும் மலிவான EV SUV இதுவாகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI