ABP Auto Awards 2024: ஏபிபி ஆட்டோ விருதுகள் - எந்தெந்த பைக்குகளுக்கு என்ன விருது? முழு லிஸ்ட் இதுதான்!

ABP Auto Awards 2024: ஏபிபி லைவ் ஆட்டோ விருதில் பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற, பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ABP Auto Awards 2024: ஏபிபி லைவ் ஆட்டோ விருதில் ஆண்டின் சிறந்த பைக்காக, ட்ரையம்ப் ஸ்பீட் 400 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஏபிபி ஆட்டோ விருதுகள்:

ஏபிபி ஆட்டோ லைவ் விருது வழங்கும் நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றுள்ளது.  2023ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த கார்கள் மற்றும் பைக்குகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பைக்குகள் மட்டுமே விருதுகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட்டன. ஆண்டின் சிறந்த பைக் உள்ளிட்ட பிற வகை விருதுகளுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்ய,  அனைத்து வாகனங்களும் ICAT- சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் சோதிக்கப்பட்டன. அதன் முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வென்ற பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


                                              ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் விருது வென்ற ஹீரோ சூம்

விருது வென்ற பைக்குகளின் பட்டியல்:

1. ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருது- TVS Apache RTR 310

2. பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட பைக் - ஹோண்டா ஷைன் 100

3. ஆஃப்-ரோடர் ஆஃப் தி இயர்- ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

4. ஆண்டின் பிரீமியம் பைக்- டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர்எஸ்

5. ஆண்டின் பசுமை இரு சக்கர வாகனம்- பஜாஜ் சேடக்

6. ஆண்டின் செயல்திறன் மிக்க மின்சார இரு சக்கர வாகனம்- அல்ட்ரா வயலட் F77

7. ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர்- ஹீரோ சூம்

8. பைக் ஆஃப் தி இயர்- ட்ரையம்ப் ஸ்பீட் 400


         ஆண்டின் சிறந்த ஆஃப் ரோடார் பைக் - ராயல் என்ஃபீல்ட் பைக்

ட்ரையம்ப் ஸ்பீட் 400:

ட்ரையம்ப் 400 ஸ்பிட் மோட்டடார் சைக்கிள் கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 2.33 லட்சம் ஆகும். ஸ்பீட் 400 ஆனது 398.15சிசி, லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8,000ஆர்பிஎம்மில் 39.5பிஎச்பியையும், 6,500ஆர்பிஎம்மில் 39என்எம் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. ஒற்றை சிலிண்டர் மோட்டார் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரைடு-பை-வயர் த்ரோட்டில், முழு-எல்இடி விளக்குகள், டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. ட்ரையம்ப் ஸ்பீட் 400 இந்திய சந்தையில் ஹார்லி-டேவிட்சன் X440 , ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 , ஹோண்டா CB300R மற்றும் KTM 390 டியூக் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது .


         ஆண்டின் சிறந்த பிரீமியம் பைக் - டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் 765 ஆர்எஸ்

ஹீரோ ஜும்:

Hero Xoom 110 என்பது 110cc ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் Xoom 110 விலை ரூ. 76,570 முதல் 85,528 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹீரோ Xoom 110 லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இது முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளையும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. 109 கிலோ  எடைகொண்ட இந்த வாகனமானது  5.2 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. இது 3 வகைகள் மற்றும் 7 அழகான வண்ணங்களில் கிடைக்கிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola