Mahindra BE6 Batman Edition: மஹிந்த்ராவின் பேட்மேன் எடிஷன் BE6 கார் மாடல் லிமிடெட் எடிஷனான விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் BE6 பேட்மேன் எடிஷன்:
மஹிந்த்ரா நிறுவனம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற Freedom_NU நிகழ்ச்சியில், BE6 காரின் பேட்மேன் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வெறும் 300 யூனிட்களுடன் லிமிடெட் எடிஷனாக மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதிகப்படியான தேவைக்கான கோரிக்கைகள் எழுந்ததால், மொத்தமாக 999 யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என மஹிந்த்ரா நிறுவனம் தெரிவித்தது. வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரி நிறுவனத்துடன் சேர்ந்து, நோலனின் டார்க் நைட் ட்ரையாலஜி தீம் அடிப்படையில், புதிய BE6 பேட்மேன் எடிஷன்காரை மஹிந்த்ரா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
135 நொடிகளில் விற்று தீர்ந்த 999 யூனிட்கள்:
வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் பேட்மேன் எடிஷன் BE6 கார் மாடலின் விநியோகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று (ஆக.23) தொடங்கியது. மஹிந்த்ராவின் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்களிலும், ஆன்லைன் தளத்திலும் இதற்கான அணுகல்கள் வழங்கப்பட்டன. முன்பதிவு தொடங்கிய எறும் 135 நொடிகளிலேயே 999 யூனிட்களும் முற்றிலுமாக விற்பனையாகியுள்ளன. BE6 காரின் அதிக ரேஞ்ச் கொண்ட பேக் த்ரீ ட்ரிம்மை கொண்டு இந்த லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
BE6 பேட்மேன் எடிஷன் - வடிவமைப்பு விவரங்கள்:
சினிமாடிக் அம்சங்கள் மற்றும் ஆட்டோமேடிக் ஸ்டைலிங்கை கொண்டு டார்க் தீம் டிசைன் லேங்குவேஜை பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் சாடின் ப்ளாக் வண்ணத்தையும், சஸ்பென்ஷன் காம்பொனண்ட்ஸ் மற்றும் ப்ரேக் காலிபர்களில் அல்கெமி கோல்ட் பெயிண்டிங்கும் வழங்கப்பட்டுள்ளது. 20 இன்ச் அலாய் வீல்கள், முன்புற கதவுகளில் பேட்மேனில் டெகல்கள், பின்புற கதவின் கிளாடிங்கில் “பேட்மேன் எடிஷன்” என்ற ஸ்டிக்கர், லிமிடெட் BE6 X தி டார்க் நைட் என்ற பேட்ஜ் பின்புறத்தில் வழங்கப்பட்டு இருப்பது, இந்த லிமிடெட் எடிஷனின் சிறப்பு வெளிப்புற அம்சங்களாக கருதப்படுகின்றன.
BE6 பேட்மேன் எடிஷன் - உட்புற சிறப்பு அம்சங்கள்
உட்புறத்தில் பூஸ்ட் பட்டன், இருக்கைகள் மற்றும் இண்டீரியர் லேபிள்களில் ஆகியவற்றில் பேட்மேன்களின் லோகோக்கள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், பயணிகளுக்கான டேஷ்போர்ட்டில் பேட்மேன் சின்னத்துடன் கூடிய பின்ஸ்ட்ரைப் க்ராபிக் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே ஆனது தனித்துவமான வெல்கம் அனிமேஷன், வெளிப்புற இன்ஜின் சத்தமானது பேட்மேன் தீமை கொண்டு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ரேஸ் கார் ஸ்டைல் பானியில் ஸ்ட்ரேப் இந்த காருக்கு கூடுதல் சிறப்பு தோற்றத்தை வழங்குகிறது.
BE6 பேட்மேன் எடிஷன் - நோலன் டச்
நோலன் ட்ரையாலஜி மூலம் ஈர்க்கப்பட்ட பேட்மேனின் எம்பலமானது, BE6 பேட்மேன் எடிஷனின் வெளிப்புறத்தில் பரவலாக பொறிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஹப் கேப்ஸ், ஃப்ரண்ட் குவார்டர் பேனல்ஸ், ரியர் பம்பர், ஜன்னல்கள் ஆகிய்வற்றோடு, நைட் ட்ரெயில் கார்பெட் லேம்ப் ப்ரொஜக்டர்கள் மூலம் ரூஃபில் கூட பேட்மேனின் எம்பலம் ஒளிரூட்டப்படுகிறது. உட்புறத்தில் டேஷ்போர்டில் பொறிக்கப்பட்ட பிரஷ்டு அல்கெமி கோல்ட் பேட்மேன் பதிப்பு தகடும் கிடைக்கிறது.
கேபினானது கர்கோல் லெதர் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலை கொண்டு ப்ரீமியம் தீமை வழங்குகிறது. கோல்ட் செபியா ஸ்டிட்சிங் மற்றும் பேட்மேன் எம்பலம் உடன் கலந்த சூட் லெதர் மூலம் அப்ஹோல்ஸ்ட்ரி பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இது வாகனத்தின் உட்புறத்தை மேம்படுத்த, கஸ்டம் கீ ஃபாப், ஸ்டியரிங் வீல், இன் - டச் கண்ட்ரோலர் மற்றும் EPB ஆகியவை தங்கம் முலாம் பூசப்பட்ட பேட்மேன் டச்சை பெறுகிறது.
BE6 பேட்மேன் எடிஷன் - பேட்டரி, விலை விவரங்கள்
வழக்கமான BE6 காரில் இடம்பெற்றுள்ள அதே 79KWh பேட்டரி தான் பேட்மேன் எடிஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 682 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் ரியர் ஆக்சில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டாரானது, 286hp மற்றும் 380Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஏசி சார்ஜிங் ஆப்ஷன்களும் உள்ளன. ஆனால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த காரின் விலை உள்நாட்டில் 27 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள் திரும்பப் பெறமுடியாத, 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தியுள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI