இதற்கான விளம்பரப் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி இக்கார் பொதுப்பார்வைக்கு வெளிவரவுள்ளது. புதிய எம்ஜி அடாப்ட் ஆர்கிடெக்சர் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாகும் எம்ஜியின் முதல் கார் இதுவேயாகும். இதே கட்டமைப்புதான் நிறுவனத்தின் எதிர்கால ஹைபிரிட், பிளக் இன் ஹைபிரிட் மற்றும் மின்சார கார்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

எலக்ட்ரிக் மாடல்

தொடக்கத்தில் இக்கார் முழுமையான எலக்ட்ரிக் மாடலாகவே களமிறங்குகிறது. பின்னர் பிளக் இன் ஹைபிரிட் மாடலும் இதில் அறிமுகப்படுத்தப்படலாம். தற்போதைய சந்தையில் இப்பிரிவில் பிளக் இன் ஹைபிரிட் தேர்வுகள் மிகவும் குறைவாக இருப்பதால், இது டொமாஹாக் காரை மற்ற வாகனங்களில் இருந்து தனித்துக் காட்டும்.

டிசைன் எப்படி?

வடிவமைப்பைப் பொறுத்தவரை இக்கார் மிகவும் தனித்துவமாகவும் வலிமையாகவும் உள்ளது. தற்போதைய ஹெக்டரை விட இது சாலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. உயரமான தோற்றம், அகலமான முன்பகுதி, முகப்பு விளக்குகளை ஒருங்கிணைத்த கருப்பு நிற கிரில் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இது எலெக்ட்ரிக் மாடல் என்பதால் முன்பக்க கிரில்லின் கீழ்ப்பகுதி பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்புறம் மற்றும் பாடியில் உள்ள கருப்பு நிற ட்ரிம்கள் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி லுக்கை தருகின்றன. பக்கவாட்டு தோற்றம் உயரமாகவும் அகலமாகவும் தெரிகிறது. ஃப்ளஷ் ஃபிட்டிங் இல்லாமல், வழக்கமான டோர் ஹேண்டில்களே வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற வீல் ஆர்ச்சுகள் மற்றும் குரோம் வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

530 கி.மீ ரேஞ்ச்

இந்த பெரிய எஸ்யூவி தோராயமாக 4,745 மிமீ நீளம், 1,850 மிமீ அகலம், 2,810 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளைக் கொண்டுள்ளது. பெரிய பிரீமியம் எலெக்ட்ரிக் கார் தேவை, ஆனால் 7 சீட்டர் வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இது 5 சீட்டர் கேபினுடன் வருகிறது. பீச் நிற சீட் கவர்களுடன், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் அடங்கிய சுத்தமான நவீன டேஷ்போர்டு அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெக்டர் டொமாஹாக் இ.வி.யில் 69.2kWh LFP பேட்டரி பேக் மற்றும் சுமார் 201bhp ஆற்றல் தரும் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச் கிடைக்கும் என கூறப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டிலும் இந்த ரேஞ்ச் நீடித்தால், நீண்ட தூர பயணங்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக மாறும். பெரிய பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த மோட்டார் மூலம் இதன் செயல்திறன் மேம்பட்டதாக இருக்கும்.

மஹிந்திரா XEV 9S-க்கு போட்டி

இந்தியாவில் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக வெளியாகும் இது, மஹிந்திரா XEV 9S போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். இதன் 5 சீட்டர் அமைப்பு மற்றும் வரவிருக்கும் பிளக் இன் ஹைபிரிட் தேர்வுகள் இதை தனித்துவமாக்கும்.

காரின் அதிகாரப்பூர்வ விலை, சார்ஜிங் திறன், சிறப்பம்சங்கள் மற்றும் ரேஞ்ச் தகவல்கள் அனைத்தும் ஆகஸ்ட் 26 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI