தமிழ்நாட்டில் தாங்கள் சந்தித்த முதல் தேர்தல் களத்திலே வெற்றி பெற்று அரைநூற்றாண்டு திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Continues below advertisement

100 நாட்கள் செய்தது என்ன?

விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் ஆட்சி 100 நாட்களை நிறைவடைந்துள்ளது. இந்த 100 நாட்களில் தவெக ஆட்சி செய்தது என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை

Continues below advertisement

2. தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

3. ரூபாய் 1 லட்சம் கோடி முதலீடு

4. 717 மதுபான கடைகள் மூடல்

5. வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்

6. தமிழ் வெற்றி கிராமப்புற மறுமலர்ச்சி

7. போதைப் பொருளை ஒடுக்க 65 சிறப்பு அதிரடிப்படை

8. அண்ணன் சீர்

9. கரும்பு, நெல்லுக்கு ஊக்கத்தொகை

10. வெற்றி வீடு திட்டம்

11. வெற்றி 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு

12. ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

13. 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்

14. காலை உணவுத்திட்ட விரிவாக்கம்

15. 6000 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

16. வெற்றி மடிக்கணினி திட்டம்

17. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன பிராண்டட் சைக்கிள்

18. அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அளவிலே திட்ட அனுமதி

இந்த திட்டங்களை தவெக அரசு தங்கள் 100 நாட்கள் சாதனையாக அறிவித்துள்ளது. இதில் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சில திட்டங்கள் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை:

பெண்கள் பாதுகாப்பை பிரதானமாக கையில் எடுத்துள்ள முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ள திட்டம் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன் தக்க நடவடிக்கையும் எடுப்பதே இவர்களின் பிரதான பணியாகும்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்:

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் இந்த திட்டத்திற்காக தவெக அரசு ரூபாய் 560 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

1 லட்சம் கோடி முதலீடு:

தவெக அரசு தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை கொண்டு வருவதில் மிகவும் தீவிரமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்த 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடல்:

தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களாலும், மதுக்கடைகளாலும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளை மூடி தவெக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் அருகே இருந்த பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

வெற்றித் திறன் பயிற்சி திட்டம்:

இந்த வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் கீழ் 12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கிராமப்புற மறுமலர்ச்சி:

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக திகழும் கிராமப்புறங்களை மேம்படுத்த கிராமப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதாரம், குடிநீர், சாலைகளை மேம்படுத்த ரூபாய் 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை:

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. போதைப் பொருளை ஒழிப்பதற்காக 65 போதைப் பொருள் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர்:

பெண்களுக்கு அண்ணன் சீராக அவர்களின் திருமணத்தை முன்னிட்டு ஒரு சவரன் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்க ரூபாய் 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஊக்கத்தொகை:

கரும்பு மற்றும் நெல் சாகுபடி தமிழ்நாட்டில் பிரதானமாக உள்ள நிலையில், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 750ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி வீடு திட்டம்:

வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

150 நாள் உத்தரவாத வேலைவாய்ப்பு:

வெற்றி 150 என்ற திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவாத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஆடுகள் வேலைவாய்ப்பு:

வெற்றி மகளிர் ஆடுகள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்தில் மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா மின்சாரம்:

தவெக அரசு அமைந்தவுடன் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்தாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்.

பயிர்க்கடன் தள்ளுபடி:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றி மடிக்கணினி திட்டம்:

வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக ரூபாய் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன மிதிவண்டிகள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மட், வாட்டர் பாட்டில் பொருத்தும் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிஎம்டிஏ அனுமதி:

வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை வெளிக்காட்டும் நோக்கமாக பல  அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அளவிலேயே திட்ட அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி தொடர்பற்ற பத்திரப்பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் 100 நாட்கள் சாதனையாக இந்த விவகாரங்கள் பார்க்கப்படுகிறது.