சமீபத்தில் வெளியான மாருதி சுஸுகி செலிரியோ கார் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் நாட்டிலேயே மிகவும் அதிக பயன்பாடு கொண்ட பெட்ரோல் காராகவும் இந்த மாடல் கருதப்படுகிறது. இந்திய சாலைகளில் மாருதி செலிரியோ மாடல் சுமார் 7 ஆண்டுகளாக ஓடி வருகிறது. மேலும், இந்தக் காலகட்டத்தில் சுமார் 6 லட்சம் மாடல்கள் விற்கப்பட்டுள்ளன. 


மாருதி செலிரியோ மாடல் தற்போது இந்தியாவில் சுமார் 4.99 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனினும் இந்த விலைக்கு இந்த மாடலில் அப்படியென்ன ஸ்பெஷல்?


விசாலமான கேபின்:


பழைய செலிரியோ மாடலை விட புதிதாக வெளியிடப்பட்டுள்ள செலிரியோ மாடலின் நீளம், உயரம் ஆகியவை ஒரே அளவாக இருந்தாலும், அதன் அகலம் சுமார் 55 மில்லிமீட்டர் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் பின்பக்கத்தில் மூன்று பெரியவர்களால் தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம். இது மிகச்சிறந்த அனுபவமாக இல்லாமல் இருந்தாலும், நடுத்தர மக்கள் இதனால் பயன்பெறுவர். 


புதிய செலிரியோ மாடலின் நான்கு கதவுகளும் திறக்கும் போது இன்னும் அகலமாகத் திறப்பதால் உள்ளே செல்வதும், வெளியே வருவதும் எளிதாக இருக்கும். மேலும் இதன் பின்பக்கத்தில் உள்ள டிக்கி சுமார் 313 லிட்டர் அளவில் இருப்பதால் அதிக லக்கேஜ் வைக்கும் வசதியுண்டு. 



புதிய சிறப்பம்சங்கள்:


புதிய செலிரியோ மாடலில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருப்பதால், காருக்குள் இருக்கும் நேரத்தின் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும். 7 இன்ச் அளவிலான ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டிருப்பதோடு, அதில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 


கூடுதல் பாதுகாப்பு:


2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய செலிரியோ மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட HEARTECT என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் முந்தைய மாடல்களை விட கட்டமைப்பு ரீதியாக இது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டது எனத் தெரிவித்ஹுள்ளது. Hill Hold Assist என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பமும், விபத்து நேர்ந்தால் இரண்டு ஏர் பேக்குகள் திறக்கும் வசதியும் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளது. மேலும், ABS பிரேக்கிங் தொழில்நுட்பமும் இந்த மாடலில் சிறப்பம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.



மீண்டும் விற்கும் போது இதன் மதிப்பு:


மாருதி சுஸுகி கார் மாடல்கள் அதிகளவில் விற்பனையாவதற்கான காரணம் அவை பயன்படுத்தப்பட்டு, மீண்டும் விற்கப்படும் போது அவற்றின் மதிப்பு சிறப்பாக இருப்பதே ஆகும். இந்தியாவின் நடுத்தர வாடிக்கையாளர்கள் பலராலும் இந்த அம்சம் பார்க்கப்படுவதால், புதிய செலிரியோ மாடலை வாங்குவோருக்கு இது சிறப்பாக அமையும். 


மைலேஜ்:


மாருதி செலிரியோ மாடல் கார் இந்தியாவின் மிகவும் அதிக பயன்பாடு கொண்ட பெட்ரோல் காராகக் கருதப்படுகிறது. அடுத்து வெளியிடப்படும் மாடல் இன்னும் மேம்பாடு கொண்டதாக இருக்கும் எனக் கூறியுள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். இந்த மாடலில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 26.68 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI