Auto Vechiles Sales: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக, 26 லட்சத்து 21 ஆயிரம் வாகனங்கள், விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ஆட்டோமொபைல் சந்தை:


இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கமானது (SIAM), கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் குவாட்ரிசைக்கிள் ஆகியவை என மொத்தமாக 26 லட்சத்து 21 ஆயிரத்து 248 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக பயணிகள் வாகன விற்பனையை பொறுத்தவரை, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் 15.9 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சி இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சமாகும்.


உள்நாட்டு விற்பனை:


ஆட்டோமொபைல் உற்பதியாளர்களுக்கு சாதகமான அரசின் முடிவுகள் மற்றும் விழாக்கால சலுகை ஆகியவற்றின் காரணமாக, வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் மட்டும் மொத்தமாக 3 லட்சத்து 89 ஆயிரத்து 714 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அதோடு,  76 ஆயிரத்து 940 மூன்று சக்கர வாகனங்களும், 18 லட்சத்து 95 ஆயிரத்து 799 இருசக்கர வாகனங்களும் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளன.  


இதையும் படிங்க: முடிந்தது மார்வெலின் லோகி எனும் தியாகியின் சகாப்தம்.. வில்லன் டூ ஹீரோ - கண்களை குளமாக்கும் டிவிஸ்ட்..


விற்பனையில் புதிய உச்சம்:


பயணிகள் வாகன விற்பனையானது இதுவரை இல்லாத புதிய உச்சமாக, அக்டோபர் மாதத்தில் 3.90 லட்சமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 15.9 சதவிகிதம் அதிகமாகும். மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 42.1 சதவிகிதம் அதிகரித்து, 77 ஆயிரம் யூனிட்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இருசக்கர வாகனங்களும் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20.1 சதவிகிதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள SIAM இன் தலைவர் வினோத் அகர்வால், “பயணிகள் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வண்டிகள் ஆகிய இரண்டும் அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் இரு சக்கர வாகனப் பிரிவும் அக்டோபர் 2023 மாதத்தில் நல்ல விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த வளர்ச்சி வேகம் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


எண்ட்ரி லெவர் கார்கள்:


முன்னதாக, எண்ட்ரி லெவல் கார்களின் விற்பனையானது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட,  செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது கால ஆண்டில் 75 சதவீதம் சரிந்து 35,000 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனையும் முறையே 39 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதமாக சரிந்துள்ளன. 


Car loan Information:

Calculate Car Loan EMI