இந்தியாவைப் பொறுத்தமட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஸ்கூட்டர்களை அதிகம் விரும்புகின்றனர். இ ஸ்கூட்டர்கள், பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டர்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.
இந்தியாவில் இந்தாண்டு அறிமுகமாக உள்ள ஸ்கூட்டர்கள், இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. TVS Jupiter Electric:
டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Jupiter. இந்த ஸ்கூட்டரின் மின்சார வேரியண்டாக சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ளது TVS Jupiter Electric. இந்த இ ஸ்கூட்டர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
2. Ather EL Scooter:
ஏதர் நிறுவனம் இந்தியாவின் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் நிறுவனம் ஆகும். ஏதர் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஏதரின் Ather EL Scooter ஸ்கூட்டர் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் மிகப்பெரிய வளர்ச்சியை ஏதர் நிறுவனம் சந்திக்கும்.
3. Honda Activa 7G:
ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Honda Activa. இந்த ஸ்கூட்டரின் 7ம் தலைமுறை மாடலானHonda Activa 7G ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த Honda Activa 7Gஸ்கூட்டர் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 80 ஆயிரம் முதல் ரூபாய் 90 ஆயிரம் வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. Honda QC3:
ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் மின்சார ஸ்கூட்டர் Honda QC3- மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. Honda ADV 160:
ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டர் Honda ADV 160. இந்த ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. TVS Jupiter CNG:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் TVS Jupiter. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் வேரியண்டில் மட்டுமே உள்ள நிலையில், இந்த TVS Jupiter சிஎன்ஜியில் இயங்கும் வகையில் விரைவில் அறிமுகமாக உள்ளது. டிசம்பர் மாதம் இது அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
7. Suzuki Burgman Street Electric:
சுசுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் Suzuki Burgman Street. இந்த ஸ்கூட்டரின் மின்சார வேரியண்டாக Suzuki Burgman Street Electric வரும் டிசம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
8.Yamaha Nmax 155:
யமஹா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. யமஹா நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஸ்கூட்டர் Yamaha Nmax 155. இது டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
9. Simple Energy Arrive:
இந்தியாவின் பிரபலமான இ ஸ்கூட்டர் நிறுவனம் Simple Energy. இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
10. Vinfast Vero X:
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் இ ஸ்கூட்டர் Vinfast Vero X. வின்ஃபாஸ்ட்டின் இந்த Vinfast Vero X இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இது டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI