Hyundai Verna Facelift: ஹுண்டாய் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள, வெர்னா ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் அப்க்ரேட்கள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அண்மையில் தான், வென்யுவின் அப்க்ரேட் செய்யப்பட்ட எடிஷனை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, வெர்னாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை தயார்படுத்தி வருகிறது. நிறுவனம் தரப்பில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆக்சென்ட் கார் மாடலுக்கு மாற்றாக 2006ம் ஆண்டு அறிமுகமான வெர்னா, செடான் பிரிவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. முதல் தலைமுறை வெர்னாவாது 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிசைனில் அசத்தும் ஹுண்டாய் வெர்னா:
அதேநேரம், 2011ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது தலைமுறை தான் வெர்னா காரின் அடையாளத்தையே மாற்றியது. 2015ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் எடிஷனுக்கு முன்பாக அதில் பயன்படுத்தப்பட்ட ”ஃப்ளூய்டிக் ஸ்கல்ப்ட்சர்” என்ற வடிவமைப்பு பாணியே இதற்கு காரணமாகும். 2017ம் ஆண்டில் சந்தைப்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறையானது K2 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு பெரிய மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் கூபே மாதிரியான ரூஃப்லைன், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேடட் சீட்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டன.
மீண்டு வருமா வெர்னா?
தொடர்ந்து 2023ம் ஆண்டு நான்காவது தலைமுறை வெர்னா கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அப்க்ரேட்கள் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முந்தைய எடிஷன்கள் பெற்ற வரவேற்பையும், விற்பனையையும் இதனால் எட்டமுடியவில்லை. இதற்கு மிட்-சைஸ் செடான் வாகனங்களின் மீதான ஈர்ப்பு சரிந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய், வெர்னாவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை தயார்படுத்தி வருகிறது. அதனை சாலை பரிசோதனையில் ஈடுபடுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெளிப்புற அப்க்ரேட்கள் என்ன?
தற்போதைய தலைமுறைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சந்தையில் நீடித்து நிற்கும் வகையில், 2026 வெர்னா எடிஷனில் தோற்றத்திற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, வெளிப்புற தோற்றங்கள் மிகப்பெரிய அளவில் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அருகே சென்று கூர்ந்து கவனித்தால், திருத்தப்பட்ட ஹெக்சகனல் க்ரில் செக்சன் மற்றும் ஃப்ரண்ட் பம்பரில் லேசான மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதை உணர முடியும். இது முன்புறத்தில் கூர்மையான தோற்றத்தை வழங்க உதவும் என கூறப்படுகிறது. அதோடு, ஃபாக் லேம்ப் அமைப்பும் புதியதாக உள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் உள்ள லைட்பார்கள் அப்படியே உள்ள நிலையில், அலாய் வீல்கள் மற்றும் பானெட் டிசைனும் மாற்றமின்றி தொடரக்கூடும்.
வெர்னா ஃபேஸ்லிஃப்ட் உட்புற அப்க்ரேட்கள் என்ன?
உட்புறத்தில் கர்வ்ட் டிஸ்பிளே ஒருங்கிணைக்கப்பட்ட, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்டியரிங் வீலும் புதியதாக உள்ள சூழலில், டேஷ்போர்ட், சென்ட்ரல் கன்சோல், சர்ஃபேஸ் ட்ரிம்ஸ் மற்றும் மெட்டீரியல்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறுகின்றன. அதேநேரம், தற்போதை சந்தையில் உள்ள வெர்னா எடிஷனில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் கிடைக்கக் கூடும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும் என கருதப்படும் ஹுண்டாயின் புதிய வெர்னா, சற்றே விலை உயர்வையும் எதிர்கொள்ளக்கூடும். தற்போதைய எடிஷனின் ஆன் - ரோட் விலை வரம்பு சென்னையில் ரூ.13.36 லட்சத்தில் தொடங்கி ரூ.21.11 லட்சம் வரை நீள்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI