Mercedes-Benz EQS Sedan: மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் கார் மாடல், மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் ரேஞ்ச் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான்:
Mercedes-Benz நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட முழுமையான மின்சார EQS செடானை அறிமுகப்படுத்தியுள்ளது . வாகனம் திருத்தப்பட்ட ஸ்டைலிங், பெரிய பேட்டரி பேக் மற்றும் சில மெக்கானிக்கல் மேம்பாடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஏப்ரல் 25 முதல் வெளிநாட்டு சந்தைகளில் ஆர்டர் செய்ய இந்த வாகனம் கிடைக்கும் என்றும், மேம்படுத்தப்பட்டாலும் செடானின் அடிப்படை விலைகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த EQS செடான் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்திய சந்தைக்கு வரும் தேதி தொடர்பான அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வடிவமைப்பு விவரங்கள்:
2025 EQS இல் மிகவும் வெளிப்படையான மாற்றம் அதன் ஃப்ரண்ட் என்ட் பகுதியில் உள்ளது. இது குரோம் ஸ்லேட்டுகளுடன் திருத்தப்பட்ட கருப்பு பேனலைப் பெற்று இருக்கிறது. இது முந்தைய எடிஷனை விட பாரம்பரிய தோற்றத்தை அளிக்கிறது. கூடுதலாக, காரின் முன்புற ஹூட்டில் நிமிர்ந்த மெர்சிடிஸ் நட்சத்திரம் உள்ளது. இது பழைய மாடலில் இடம்பெற்றிருக்கவில்லை. இவற்றைத் தவிர, செடான், முந்தைய எடிஷனை போன்ற ஒத்த ஸ்டைலிங் குறிப்புகளைக் கொண்டுள்ளது. பின்புற குஷனில் நாப்பா லெதர் பைப்பிங்குடன் குரோம் உச்சரிப்புகளுடன் கூடிய ஏர் வென்ட்கள் போன்ற சில சிறிய மாற்றங்களையும் உட்புறத்தில் கொண்டுள்ளது. கார் இப்போது MBUX ஹைப்பர்ஸ்கிரீன் குவாலியிட்டியில் கிடைக்கிறது.
தொழில்நுட்ப அம்சங்கள்:
வாகனமானது ஒரு தானியங்கி லேன் மாற்றம் (ALC) செயல்பாட்டைக் கொண்டுள்ளது. அதன்படி, காரானது 80-140 கிமீ/மணி வேக வரம்பிற்குள் தானாகவே பாதை மாற்றத்தைத் தொடங்குவதோடு, முன்னாள் உள்ள வாகனத்தை தானாக முந்திச் செல்லும். இது தவிர, 2025 EQS செடான் ஒரு பெரிய 118 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இது முந்தைய 108.4 kWh பேட்டரி பேக்கை விட அதிகமாகும். EV ஆனது, டிரைவிங் நிலைமைகளைப் பொறுத்து, ஆல்-வீல்-டிரைவ் பதிப்புகளில் முன் மோட்டாரை அணைக்கும் டிஸ்கனெக்ட் யூனிட்டையும் (DCU) கொண்டுள்ளது. இதன் விளைவாக பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், EQS 450 இப்போது 799 கிமீ வரை செல்லும். அதே நேரத்தில் முதன்மையான EQS 450+ 822 கிமீ தூரம் வரை செல்லும். காரில் உள்ள கூடுதல் மாற்றங்களில் மேம்படுத்தப்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சிறந்த டிசெலரேஷன் ரேட் ஆகியவை அடங்கும்.
இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் கார் மாடலின் விலை, ரூ.1.62 கோடி முதல் ரூ. 2.45 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI