2024 Bajaj Pulsar N250: பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் என்250 பைக் மாடலின் விலை, ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் என நிர்ண்யம் செய்யப்பட்டுள்ளது.


பஜாஜ் பல்சர் என்250:


பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவின் அடையாளமாக இருப்பது பல்சர். செயல்திறன் மற்றும் வடிவமைப்பு என அனைத்து விதங்களிலும் இது பயனாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாகவே விற்பனையிலும் உச்சத்தை எட்டியது. இதனை தொடர்ந்து பல்சரின் பல்வேறு மேம்பட்ட எடிஷன்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் புதிய பல்சர் என்250 மாடலை, பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை முந்தைய மாடலை விட, வெறும் 829 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.


பஜாஜ் பல்சர் என்250-யில் வந்த புதிய மாற்றங்கள்:


2024 பல்சர் N250 இன் மிகப்பெரிய காட்சி மாற்றம் 37mm USD ஃபோர்க் தான். முந்தைய மாடலின் டெலஸ்கோபிக் யூனிட்டின் விட்டம் இதே அளவு தான். புதிய மோட்டார்சைக்கிள் வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று வண்ணங்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்கள் கோல்டன் USD ஃபோர்க் உடன் வருகின்றன. இன்ஜின் கேசிங் மற்றும் எக்ஸாஸ்ட் மஃப்லரில் சில்வர் பூச்சுகளை கொண்டுள்ளன, அதே சமயம் கருப்பு நிறத்தில், அனைத்து கூறுகளும் அதே நிறத்தை பெறுகின்றன. பழைய N250 மாடலில் அதன் உயர்மட்ட இரட்டை சேனல் ஏபிஎஸ்,  ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே வந்தது, இப்போது தேர்வு செய்ய பல விருப்பங்கள் உள்ளன. 


பஜாஜ் பல்சர் N250-யில் ஒரு புதிய LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது (N150 & N160 இல் காணப்படுவது போன்றது).  அதனுடன் புளூடூத் இணைப்பு மற்றும் அழைப்புகள், நோடிபிகேஷன் அலெர்ட்களை பெறும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளன. புதிய டாஷில் இந்த செயல்பாடுகள் அனைத்தையும் ரைடர் கட்டுப்படுத்தக்கூடிய் வகையில் ஸ்விட்ச்கியர் திருத்தப்பட்டுள்ளது. 


ரைடிங் மோட்கள்:


புதிய N250 பல்சர் ஏபிஎஸ் முறைகளை கொண்டுள்ளது, அதன்படி,  மழை, சாலை மற்றும் ஆஃப்-ரோடு ஆகிய ரைடிங் மோட்களை பெற்றுள்ளது.  புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் N250 இப்போது முன்புறம்  110/70-17, மற்றும் பின்புறம்  140/70-17 என்ற அளவிலான பரந்த டயர்களை பெற்றுள்ள.  வாகனத்தின்  எடையும் 2 கிலோ அதிகரித்துள்ளது.  14 லிட்டர் டேங்கை பெற்று 164 கிலோவை மொத்த எடையாக கொண்டுள்ளது.


இன்ஜின் விலை விவரங்கள்:


நன்கு அறியப்பட்ட ஏர்/ஆயில்-கூல்டு, 249cc, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது,  8,750rpm-ல் 24.5hp ஆற்றலையும், 6,500rpm-ல் 21.5Nm இழுவை திறனையும் வெளிப்படுத்தும். மாற்றங்களின் அடிப்படையில் புதிய பல்சர் என்250 மாடலின் விலை வெறும்  ரூ.829 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதன்ப்டி புதிய மாடலின் விலை 1 லட்சத்து 50 ஆயிரத்து 829 ரூபாய் ஆக உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI