Two Wheeler Sales: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பெரும் பங்கை ஆக்கிரமித்துள்ளன.
இருசக்கர வாகன விற்பனை:
இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனை, மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் நேர்மறையான ஏற்றத்துடன் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. பிரதான 6 இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அடிப்படையில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, சுசுகி மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஆகிய நிறுவங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை:
உள்நாட்டுச் சந்தைகளில் கடந்தாண்டு மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட 12,26,262 யூனிட்களை விட, 15.24 சதவிகிதம் உயர்ந்து 14,13,152 யூனிட்கள் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், இது கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட 14,48,479 யூனிட்களை விட 2.44 சதவிகிதம் குறைவாகும். மீண்டும், இந்த பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிப்ரவரி 2024 இல் விற்பனை செய்யப்பட்ட 4,45,257 யூனிட்கள விட, 3.14 சதவிகிதம் அதிகரித்து 4,59,257 யூனிட்களை விற்பனை செய்து முடலிடம் பிடித்துள்ளது. ஹோண்டா 2024 பிப்ரவரியில் விற்பனை செய்த 4,13,967 யூனிட்களை விட 13.48 சதவிகித வீழ்ச்சியை கண்டாலும், 3,58,151 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. TVS நிறுவனத்தின் மாத விற்பனை 2.61 சதவிகிதம் சரிந்து 2,60,532 யூனிட்டுகளையும், பஜாஜ் ஆட்டோ மற்றும் சுசுகி ஆகிய இரண்டும் முறையே 1,83,004 யூனிட்கள் மற்றும் 86,164 யூனிட்களை விற்பனை செய்துள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 66,044 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
இருசக்கர வாகன ஏற்றுமதி:
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதத்தில் உலகளாவிய சந்தைகளுக்கு 1,30,881 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்து இந்த பிரிவில் முதலிடம் கண்டுள்ளது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 5.42 சதவிகிதம் அதிகமாகும். ஏற்றுமதி பட்டியல் TVS கடந்த ஆண்டை காட்டிலும் 25.66 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் மாத விற்பனையில் 7.08 சதவிகிதம் சரிந்து 83,914 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்துள்ளது. Hero MotoCorp கடந்த மாதத்தில் 31,158 யூனிட்களை ஏற்றுமதி செய்து மாத விற்பனையில் 34.57 சதவிகித வளர்ச்சியுடன் கண்டுள்ளது. சுசுகி நிறுவனம் 17,505 யூனிட்களையும், ராயல் என்ஃபீல்டு 9,507 யூனிட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.
இருசக்கர வாகன மொத்த விற்பனை:
கடந்த மாதத்தில் இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 17,14,421 யூனிட்களை எட்டியது, அதாவது மார்ச் 2023 இல் விற்கப்பட்ட 14,55,700 யூனிட்களில் இருந்து 17.77 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 2024 இல் விற்கப்பட்ட 17,52,985 யூனிட்களை விட 2.20 சதவிகிதம் சரிந்தது. இந்த பட்டியலில் Hero MotoCorp நிறுவனம் 4,90,415 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து ஹோண்டா 3,86,455 யூனிட்களையும், TVS 3,44,446 யூனிட்களையும், பஜாஜ் ஆட்டோ 3,13,885 யூனிட்களையும் மற்றும் சுசுகி 1,03,669 யூனிட்களையும், ராயல் என்ஃபீல்டு 75,551 யூனிட்களையும் விற்பனை செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI