KTM BIKE: கேடிஎம் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் அறிமுகம்..

கேடிஎம் நிறுவனத்தின் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Continues below advertisement

கேடிஎம் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது  890 அட்வென்ச்சர் R மோட்டர்சைக்கிளை மேம்படுத்தியது. அதைதொடர்ந்து  2023ம் ஆண்டிற்கான புதிய வெர்ஷன் 890 அட்வென்ச்சர் மாடலை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் மட்டுமே 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பைக்கை தற்போதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் ஏற்கனவெ தெரிவித்தது.

Continues below advertisement

புதிய பைக் அறிமுகம்:

இந்நிலையில் தான் கேடிஎம் நிறுவனம் 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய 2023 மாடலில் வி-ட்வின் லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 158 குதிரைகளின் சக்தி, 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிப்டர், WP சஸ்பென்ஷன் ப்ரோ உள்ளிட்டவை ஆப்ஷனல் அக்சஸரீயாக வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

முந்தைய மாடலை போன்றே புதிய சூப்பர் அட்வென்ச்சர் மாடல் பைக்கிலும் ஸ்ப்லிட்-ஸ்டைல் முகப்பு விளக்கு, செமி ஃபேரிங் டிசைன், 23 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3-பார்ட் எரிபொருள் டேங்க், ஸ்ப்லிட் ஸ்டைல் இருக்கைகள், டூயல் பாரெல் எக்சாஸ்ட், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் முழுமையான எல்.ஈ.டி விளக்குகள், 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புதிய நேவிகேஷன் மென்பொருள், செலக்டபில் ரைடு மோட்கள், WP செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி உள்ளது. இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்+ கைடன்ஸ், வேபாயிண்ட் மார்க்கர், மியூசிக் மற்றும் போன் அழைப்புகளை இயக்கும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் விவரங்கள்:

புதிய 2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மாடல்- ஆரஞ்சு மற்றும் பிளாக், கிரே என இரண்டு விதமான புதிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது. அத்துடன், ஆட்-ஆன் மற்றும் அக்சஸரீஸ்கள் பட்டியலில் கேடிஎம் பவர்பார்ட்ஸ் கலெக்‌ஷன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் பாதுகாப்பு, டீடெயிலிங், அதிக செயல்திறன், லக்கேஜ், ரேக் மற்றும் பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 890 அட்வென்ச்சர் மாடலை போன்றே, புதிய 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் மாடலையும் விரைவில் இந்தியாவில் அறிமுகபடுத்தும் திட்டம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement
Sponsored Links by Taboola