ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஹோண்டா நிறுவனம்:


இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஹோண்டா.  நடுத்தர விலையில் அதிகபட்ச மைலேஜ் கொடுக்கும் வகையிலான வாகனங்களை வடிவமைப்பது இந்த நிறுவனத்தின் வெற்றிக்கான மந்திரமாகும். அந்த வகையில் ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஹார்னெட் மாடல் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த மாடல் மோட்டார்சைக்கிள், இந்திய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. போட்டி நிறுவனங்கள் ஸ்போர்டிபை வாகனங்களை வெளியிடும் வரை, ஹார்னெட் பைக் இந்திய சந்தையில் கோலோச்சியது. இந்நிலையில் சந்தையில் நிலவும் போட்டிகளை உணர்ந்து, மேம்படுத்தப்பட்ட ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஹார்னெட் 2.0:


இந்நிலையில் தான் OBD2 தொழில்நுட்ப அம்சம் கொண்ட இன்ஜின் உடன் புதிய ஹார்னெட் 2.0 மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  மற்றபடி பெரியதாக எந்தவித மாற்றங்களும் இந்த மாடலில் இடம்பெறவில்லை. தோற்றத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  கூடுதலாக எந்தவித புதிய நிறத்திலும் அறிமுகப்படுத்தவில்லை. அதேநேரம், மற்ற வாகனங்களுக்கு வழங்குவதை போன்றே ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளுக்கும் 10 வருட வாரண்டியை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.  நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கான கட்டணம் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் ஹார்னெட் 2.0 வாகன டெலிவிரி தொடங்கும் என கூறப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


2023 ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலில் 184.4சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிஎஸ்-6 விதிகளுக்கு உட்பட்ட இந்த இன்ஜினில், காற்று மாசுபாட்டை குறைக்க உதவும்  OBD2  தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


சிறப்பம்சங்கள்:


புதிய ஹோண்டா மாடலில் எல்.ஈ.டி. விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் எல்.சி.டி. டேஷ்போர்டில் 5-லெவல் இலுமினேஷன் கண்ட்ரோல், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. தோற்றத்தை பொருத்த வரையில் கூர்மையான படி பேனல்களுடன் அதே ஸ்போர்ட்டி லுக்கில் அசத்தலாக காட்சியளிக்கிறது.


விலை விவரம்:


இந்திய சந்தையில் இதன் விலை  ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு, 3 வருடங்கள் ஸ்டேண்டர்ட் வாராண்டியாக வழங்கப்படுகிறது. 7 வருடங்கள் பயனாளர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது. இதற்கென அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI