6 Airbag Cars: உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!

6 Airbag Cars: பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 6 ஏர் பேக்குகளை கொண்ட, 10 மலிவு விலை கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

6 Airbag Cars: 6 ஏர் பேக்குகள் உடன் மலிவு விலையில் கிடைக்கும் 10 கார்களின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

காரில் பாதுகாப்பிற்கான ஏர்பேக் அம்சங்கள்: 

ஒரு புதிய கார் அல்லது SUV வாங்கும் போது, நாம் அனைவரும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் மிக முக்கியமானது அதன் பாதுகாப்பு அம்சம் தான். இதை மனதில் வைத்து, உற்பத்தியாளர்கள் சமீப காலமாக தங்களது வாகனங்களில் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களை இடம்பெறச் செய்கின்றனர். இதில் விபத்து சமயங்களில் உயிர் காக்க உதவும் ஏர் பேக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், 6 ஏர் பேக்குகள் உடன் இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் கார்கள் மற்றும் SUV-க்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்:

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் காரானது ரூ.5.92 லட்சம் ஆரம்ப விலையில், ஆறு ஏர்பேக்குகளுடன் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை காராக உள்ளது. இந்த கொரிய கார் தயாரிப்பு நிறுவனம், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் இடம்பெறுவதை கடந்த அக்டோபர் மாதம் ஸ்டேண்டர்ட் ஆக மாற்றியது.

ஹூண்டாய் எக்ஸ்டர்:

ஹூண்டாய் எக்ஸ்டரின் தொடக்க விலை ரூ. 6.13 லட்சம். அதோடு,  ஆறு ஏர்பேக்குகளுடன் இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எஸ்யூவி இதுவாகும்.  எக்ஸ்டரின் அனைத்து  டிரிம்களிலும் 6 ஏர் பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. 

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்: 

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்,  ஆறு ஏர்பேக்குகளை ஸ்டேண்டர்டாகப் பெறுகிறது. இது ஒரு புதிய 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் Z சீரிஸ் இன்ஜினைப் பெறுகிறது. இதன் தொடக்க விலை 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகும்.

ஹூண்டாய் ஐ20: 

ஹூண்டாயின் பிரீமியம் ஹேட்ச்பேக் i20 மாடலானது, ஸ்டேண்டர்டாக ஆறு ஏர்பேக்குகளைப் பெறுகிறது. இது ஒரே 83hp, 115Nm, 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது விருப்பமான CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 7 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகும்.

ஹூண்டாய் ஆரா:

இந்த பட்டியலில் உள்ள மற்ற ஹூண்டாய்களைப் போலவே, ஆராவும் ஆறு ஏர்பேக்குகளை ஸ்டேண்டர்டாகப் பெறுகிறது. இது Exter, i20 மற்றும் Grand i10 Nios போன்ற அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது.இதன் ஆரம்ப விலை 7 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயாகும்.

மஹிந்திரா XUV 3XO:

மஹிந்திரா XUV 3XO 6 ஏர்பேக்குகளை கொண்ட கார்களின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.49 லட்சத்தில் தொடங்கி ரூ.14.99 லட்சம் வரை செல்கிறது. 

ஹூண்டாய் வென்யூ:

6 ஏர் பேக்குகளை கொண்ட மலிவு விலை கார்களின் பட்டியலில் ஹூண்டாய் வென்யூ ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அனைத்து டிரிம்களிலும் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த காம்பாக்ட் SUV மூன்று இன்ஜின் விருப்பங்களைப் பெறுகிறது.

கியா சோனெட்:

 ஹூண்டாய் வென்யூவைப் போலவே, கியா சோனெட்டும் தனது அனைத்து எடிஷன்களிலும் ஆறு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.7.99 லட்சம் தொடங்கி ரூ.15.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டாடா நெக்ஸான்:

டாடா நெக்ஸான் ஆறு ஏர்பேக்குகளை கொண்ட மற்றொரு தரமான சிறிய SUV ஆகும். XUV 3XO, வென்யூ, சோனெட் மற்றும் பிரேஸ்ஸா ஆகியவற்றிற்கு போட்டியாக உள்ள, இந்த காரின் விலை ரூ. 8.15 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 

மாருதி சுசுகி பலேனோ

Maruti Suzuki Baleno ஆனது Zeta வேரியண்டிலிருந்து ஆறு ஏர்பேக்குகளுடன், ஸ்டாண்டர்டாக டூயல்-ஃப்ரன்ட் ஏர்பேக்குகளைப் பெறுகிறது. ஹுண்டாய் i20 மற்றும் டாடா ஆல்ட்ரோஸ் மாடல்களுக்கு போட்டியாக உள்ள இந்த காரின் விலை 8.43 லட்சம் முதல் 9.88 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola