ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான கற்களை நமக்கு வழங்கியிருக்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த ரத்தினைக் கல்லை அணிவதால் அந்தந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.


அனுபவத்திலும் இது பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. ரத்தினக் கற்கள் கண்டிப்பாக பிரச்னையை தீர்க்க வல்லது. ஆனால் இதனை ஒரு நல்ல அனுபவம் மிக்க ஜோதிடர் வழிகாட்டிய பிறகுதான் அதாவது அவரது அறிவுரையின் பேரில்தான் ரத்தினக் கல் போட வேண்டும். நீங்கலாக ராசிப் படி ஏதோ ஒரு ரத்தினக் கல்லை வாங்கிப் போட்டால் அது நல்லதல்ல. காரணம் ரத்தினக் கல் கூட பக்க விளைவுகளை தரக் கூடியது என நம்பப்படுகிறது. அதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு. நவகிரக நவரத்தினக் கற்களை அணியக்கூடிய முறை என்பது ஜாதக ரீதியாக நாம் பார்த்து அணியவேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய லக்னம் என்ன - ராசி என்ன - என்ன தசா புத்தி நடக்கிறது - எந்தந்த கிரகம் பலமாக இருக்கிறது - என்னென்ன காரியங்களுக்காக நாம் அணிய வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நமக்கு நன்மையைக் கொடுக்கும் ஒவ்வொரு கிரகத்திற்குரிய கற்கள்: சூரியன் - மாணிக்கம் சந்திரன் - முத்து, செவ்வாய் - பவளம், புதன் - பச்சை, மரகதம் குரு - கனக புஷ்பராகம், சுக்கிரன் - வைரம், சனி - நீலம், ராகு - கோமேதகம், கேது - வைடூரியம் என ராசிக்கல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.


அணியக்கூடிய முறைகள்: பெருவிரலில் (கட்டைவிரல்) பொதுவாக மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும். ஆட்காட்டி விரலில் குருவினுடைய புஷ்பராக கல் - செவ்வாயினுடைய பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் மற்றும் அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும். வைரத்தை மோதிர விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை அல்லது வைரம் அணிவது சிறப்பு. ராகு கேதுவிற்கு கல் அணிவதை ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.


இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன கற்கள் அணிவதால் நன்மைகள் உண்டாகும் என்பதைப் பார்க்கலாம்.



மேஷம்


மேஷ ராசியின் அதிபதி செவ்வாய், எனவே அவர்கள் சிவப்பு பவளத்தை அணிய வேண்டும், அதற்கு மாற்றாக கார்னிலியன் சிவப்பு பவளமும் அணியலாம், இது திடமாக வாழ்வை நடத்தி செல்ல தேவையான சக்தியை உடலுக்கும் மனதுக்கும் வழங்கும் தன்மை கொண்டுள்ளது. இது அடக்கம், ஞானம், மகிழ்ச்சி மற்றும் அழியாமையின் சின்னமாகும். இது பொதுவாக குடல் பிடிப்பு, தூக்கமின்மை மற்றும் சிறுநீர்ப்பை கற்களை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது


ரிஷபம்


ரிஷப ராசியின் அதிபதி வெள்ளி. இவர்கள் பொதுவாக மலிவு விலையில் கிடைக்கும் வைரங்களான, சஃபயர் (நீலக்கல்), டான்புரைட், பீனகைட், வெள்ளை புஷ்பராகம் மற்றும் வெள்ளை கற்கள் வைரத்தை அணிவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஈர்ப்பையும், அழகியலையும் தருவதாகக் கூறப்படுகிறது.


மிதுனம்


மிதுன ராசியின் அதிபதி புதன், எனவே அவர்கள் மரகதத்தை அணிய வேண்டும், அதன் மாற்றாக பச்சை டூர்மேலைன் மற்றும் பெரிடோட்டையும் அணியலாம். மரகதம் புத்தி கூர்மையை அதிகரிக்கிறது, அதுமட்டுமின்றி அணிபவரை விரைவாக அறிவு மிகுந்தவராக மாற்றுகிறது. புதன் புத்தி, கலை, படைப்பாற்றல் மற்றும் அறிவு ஆகியவற்றின் புரவலர் ஆவார், மேலும் இந்த குணங்கள் அனைத்தையும் பெற விரும்பும் மக்களுக்கு மரகதம் நன்மை அளிக்கிறது என நம்பப்படுகிறது


கடகம்


கடக ராசியின் அதிபதி சந்திரன், எனவே அவர்கள் முத்து அணிய வேண்டும், அதன் மாற்றாக நிலவுக்கல்லையும் அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.


சிம்மம்


சிம்ம ராசி காரர்களின் அதிபதி சூரியன், எனவே சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். அதற்கு மாற்றாக சிவப்பு ஸ்பைனல், கார்னெட், சிவப்பு டூர்மேலைன் மாணிக்கம் ரத்தினத்தை உறிஞ்சுகிறது. இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். புத்திசாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும். கருத்து வேறுபாடுகளை போக்கும். நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது.


கன்னி


கன்னி ராசியின் அதிபதி புதன், எனவே கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். அதன் மாற்றாக பச்சை டூர்மேலைன் மற்றும் பெரிடோட்டையும் அணியலாம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். காதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.



துலாம்


துலாம் ராசியில் அதிபதி வெள்ளி, துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இவர்கள் பொதுவாக மலிவு விலையில் கிடைக்கும் வைரங்களான, சஃபயர் (நீலக்கல்), டான்புரைட், பீனகைட், வெள்ளை புஷ்பராகம் மற்றும் வெள்ளை கற்கள் வைரத்தை அணிவது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும். நெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். நிறைய அன்பை தரும், அன்பான மனிதராக உருவாக்கும் என நம்பப்படுகிறது.


விருச்சிகம்


விருச்சிக ராசியில் அதிபதி செவ்வாய். விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.


தனுசு


தனுசு ராசியின் அதிபதி குரு, தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும். இது மன ஆற்றலை மேம்படுத்துகிறது மற்றும் பசியின்மை, அஜீரணம், தொழுநோய் மற்றும் பைல்ஸ் ஆகியவற்றிற்கு தீர்வாகும் என நம்பப்படுகிறது.


மகரம்


மகர ராசியின் அதிபதி சனி, மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக்கூடியது என நம்பப்படுகிறது.


கும்பம்


கும்ப ராசாயின் அதிபதி சனி, கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும் என நம்பப்படுகிறது.


மீனம்


ராசியின் அதிபதி வியாழன், மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.


மேலே கூறியதுபடி அவரவர் ராசிகளுக்கு ஏற்ற நிற கற்களை அணிந்தால் வாழ்வில் நல்ல விஷயங்கள் நிறைய நடந்து வாழ்க்கை மகிழ்ச்சியாகும் என நம்பப்படுகிறது.