சனி பகவானின் பெயர்ச்சியால் பணவிசயத்தில் அதிக கவனம் தேவை என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சனி பகவான் என்றாலே சீரழிக்கும் கடவுள், தண்டிக்கும் கடவுள் என நம்பப்பட்டு வரும் நிலையில், சனி பெயர்ச்சி என்பது பெரும் கவனத்தினை பெறுகிறது.  இந்த சனி பெயர்ச்சியால் பணம் சார்ந்த விசயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஜோதிடர்கள் கூறியவற்றில் மிக முக்கியமானவற்றை இங்கு பார்க்கலாம்,  


சனி தேவனின் கண்களை பார்க்காதீர்


சனி பகவானை வணங்க கோவிலுக்கு செல்லும் நீங்கள் சனி பகவானின் கண்களைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டோ அல்லது சனி பகவானின் பாதத்தினை பார்த்தோ வணங்க வேண்டுமாம். சனி பகவானின் வலது புறத்தில் நின்று வணங்க கூடாது எனவும் இவ்வாறு வணங்குவதால் வாழ்வில் துன்பங்கள் இன்றி சனி பகவானின் உக்கிரமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என நம்பபடுகிறது.


சனி பகவானுக்கு முதுகினை காட்ட கூடாது  


சனி பகவானை வணங்கிவிட்டு உடனடியாக திரும்பக் கூடாது. வணங்கிவிட்டு பின்னால் நகரும்படியாக நடந்து வந்து பின்னர் இயல்பாக நடக்கலாம். இவ்வாறு செய்வதால் சனி பகவானின் உக்கிரமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என நம்பபடுகிறது.


ஆடைகளின் நிறம்


சனி பகவானை வழிபடும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டுமாம், அவருக்கு விருப்பமான கருப்பு மற்றும் நீல நிற ஆடைகளை அணிவது நன்மை பயக்குமாம். இவ்வாறு செய்வதால் சனி பகவானின் உக்கிரமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என நம்பபடுகிறது.


சனியும் சூரியனும் பகைவர்கள்


சனி பகவானை வணங்கச் செல்லும் போது, தீபமேற்ற கொண்டு செல்லப்படும் எண்ணெய் காப்பர் பாத்திரத்தில் இல்லாமல் இரும்பு பாத்திரத்தில் இருத்தல் அவசியமாம். ஏனெறால் காப்பர் சூரிய பகவானை குறிக்க கூடியது. சனியும் சூரியனும்  பகைவர் என்பதால் இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டுமாம்.


ராசியான திசை


சனி பகவானுக்கு கிழக்கு திசை ஆகாது என்பதால், எந்த செயலைச் செய்வதானாலும், மேற்கு திசை நோக்கி தொடங்கி செயலை துவங்குவது நன்மை பயக்குமாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண