சமீபமாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனின் பரபரப்பான கருத்துக்களால் கோலிவுட் வட்டாரம் திகிலாகி வருகிறது. அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளும், புகாரும் எழுந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாடகி சுசித்ரா குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
இந்தநிலையில், தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சினிமா பாடகி சுசித்ரா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பாடசி சுசித்ரா குறித்து சில கருத்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி சுசித்ரா நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு நேரடியாக போன் செய்து என்னை பற்றி நீங்கள் கூறிய தகவல்களுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா..? இருந்தால் காட்டுங்கள் என்று தெரிவித்தார். இந்த ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதற்கிடையே பாடகி சுசித்ரா சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தன் மீது நடிகர் பயில்வான் ரங்கநாதன் எந்தவித ஆதாரமுமின்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். என் மீது வேண்டுமென்றே அவதூறாக கருத்துகளை கூறி என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் எனக்கு பாடல் பாடும் வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவே, என்னை பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறான கருத்துகளை தொடர்ந்து பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் :
பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.
மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். சில நேரங்களில் உறுதி செய்யப்ப்படாத தகவல்களையும் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை. இப்படி சினிமாத்துறையிலேயே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரங்கநாதன் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்