வாஸ்து முறைப்படி வீடுகளில் சுவர் கடிகாரத்தைக் குறிப்பிட்ட திசைகளில் வைக்கும் போது நமக்கு பாசிடிவ் எனர்ஜி முழுமையாகக் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரியக் கட்டிடக்கலையைக்குறிக்கும் விதமாக வாஸ்து சாஸ்திரம் விளங்கி வருகிறது. பொதுவாக வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும் என்பதால், வீடு கட்டும் அனைவரும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகின்றனர். இதோடு மட்டுமின்றி தங்கள் வீடுகளில் உபயோகிக்கும் பீரோ, கட்டில் போன்றவற்றை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்கும் பலர் தற்போது வாஸ்து பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் இங்கே தெரிந்துக்கொள்ள விருப்பது வாஸ்து முறைப்படி சுவர் கடிகாரம் எங்கு மாற்ற வேண்டும் என்பது தான். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கடிகாரம் என்பது முக்கியமான ஒன்றாகும்.
தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தையும், தங்களுடைய வேலையையும் சரியான நேரத்தில் செய்வதற்கு உதவியாக உள்ளது. மேலும் தனக்கான நேரத்தை ஒருமுறை இழந்துவிட்டால் மீண்டும் கொண்டுவரவே முடியாது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கடிகாரத்தை நம் வீடுகளில் எங்கு மாட்டிவைத்தால் நம் வாழ்வு செழிக்கும் என பலருக்கு கேள்விகள் எழக்கூடும்.
இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், வாஸ்து முறைப்படி எந்த திசையில் கடிகாரம் வைத்துக்கொள்ளலாம் என நாம் இங்கே தெரிந்துக்கொள்வோம். நேர்மறை எண்ணங்களை மட்டும் நமது வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் சுவர் கடிகாரங்களை நாம் வைக்கலாம். பொதுவாக வடக்கு திசையில் செல்வம் மற்றும் செழிப்பைத் தரும் குபேரன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வடக்கு திசையில் சுவர் கடிகாரத்தை வைக்கும் போது பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு கிடைக்கிறது.
மேலும் கிழக்கு திசையில் லட்சுமி போன்ற தெய்வங்கள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கிழக்கு திசையிலும் சுவர் கடிகாரங்களை வைத்துக்கொள்ளலாம். மேலும் வடகிழக்கு திசையில் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த திசையிலும் சுவர் கடிகாரங்களை வைக்கும் போது சிறந்த பலன்களை நாம் பெற முடியும்.
ஆனால் வீடு அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் கடிகாரத்தை பொருத்தக்கூடாது. இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேப்போன்று வீட்டின் கதவுக்கும் மேலே உள்ள சுவற்றில் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் ஏதேனும் கடிகாரம் ஓடாத நிலையில் கிடந்தாலோ, அல்லது பழுதடைந்திருந்தாலோ? அல்லது உடைந்து இருந்தாலோ? அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் வராமல் பாதுகாக்க முடியும். இதோடு உங்களது வீடுகளில் வைத்திருக்கும் கடிகாரத்தில் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிறக்கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைத்திருப்பது நமக்கு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும் என கூறப்படுகிறது.