கடந்த ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மிகக் குறைவு என்றே கூறலாம். தற்போது இந்தியா முழுவதும் சர்க்கரை வியாதி உள்ளவர்களின் அளவுகளை எடுத்து பார்த்தால் தெருவுக்கு இரண்டு பேருக்கு நிச்சயமாக சர்க்கரை வியாதி இருப்பதை நம்மால் காண முடிகிறது. இப்படியே போனால் உலக அளவில் சக்கரை வியாதி உள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
இனிப்பு சுவையும், குருவின் ஆதிக்கமும் !!!
ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கம் உண்டு.
சூரியன் - காரம்
சந்திரன் - உப்பு
செவ்வாய் - கசப்பு
புதன் - கலப்பு சுவை
குரு - இனிப்பு
சுக்கிரன் - புளிப்பு
சனி - துவர்ப்பு
இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சுவை உண்டு. எந்த ஜாதகருக்கு என்ன சுவை பிடிக்கும் என்பதை வைத்து அவர்கள், எந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை ஜோதிடர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். அதேபோல் ஒரு ஜாதகருக்கு தசாபுத்தி நடக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட தசா புத்தியின் அதிபதிகள் கொண்டிருக்கக் கூடிய சுவையை அந்த ஜாதகர் அதிகம் விரும்புவார் என்பது உண்மை .
கோச்சார கிரகங்களும், சர்க்கரை வியாதியும் :
குரு ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றிருப்பார் என்றால் அவர் நிச்சயமாக இனிப்பை அதிகம் சாப்பிடக்கூடியவராகவோ அல்லது சாப்பிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் தன்மை உடையதாகவோ இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் சர்க்கரையை அதிகமாக விரும்புவதற்கு குருவுடன் ராகு சேர்த்து இருப்பின் அதிகமான எடை கொண்டவராகவும், அதிக அளவு இனிப்பை உட்கொண்டதால் சர்க்கரை நோயினால் ஆட்கொள்ளப்பட்டவராகவும் இருக்கக்கூடும். சிலருக்கு சர்க்கரை வியாதியானது குறிப்பிட்ட கால அளவிற்கு பெரிய அளவில் தொந்தரவை செய்துவிட்டு பின்பு அது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதும் உண்டு.
உதாரணத்திற்கு உங்களின் பிறப்பு ஜாதகத்தில் குரு தனுசு ராசியில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம் அந்த ராசிக்கு குரு வரும் ஒரு வருட காலம் உங்களுக்கு சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாக காணப்படும் மருத்துவரைப் பார்த்து சோதனை செய்த பிறகு இவ்வளவு நாள் இது எனக்கு தெரியாமல் போயிட்டு என்று ஆச்சரியமும் பட வைக்கும். அந்த குறிப்பிட்ட ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோயாளியாக உங்களை மாற்றி விட்டு, பின்பு குரு அந்த வீட்டை கடந்து சென்ற பின்பாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உங்கள் உடல் கட்டுக்குள் வைக்க வாய்ப்புண்டு.
சர்க்கரை வியாதி எப்பொழுது வரும் என்பதை கண்டுபிடிக்கலாம்!!!
உங்களுடைய பிறப்பு ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ? அதே வீட்டிற்கு திரிகோணத்தில் கோச்சாரத்தில் குரு வரும் காலம் தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்த காலம். உதாரணத்திற்கு உங்களுடைய பிறப்பு ஜாதகத்தில் மீன ராசியில் குரு இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அதே மீன ராசிக்கு கோச்சார குரு கடகத்தில் வரும்போது அல்லது விருச்சக ராசியில் வரும்போது அல்லது மீன ராசியில் பிரவேசிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக சர்க்கரை வியாதி வரும் அல்லது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடும்.
சந்திரன் இருக்கும் வீட்டிற்கு குரு வரும் காலம் சர்க்கரை வியாதியை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஆனால் அது உங்களுக்கு தெரியாமல் பல வருடங்களாக நீங்கள் அப்படியே ஓட்டி இருப்பீர்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு திரிகோணத்தில் குரு வரும் காலம்தான் நீங்கள் சர்க்கரை வியாதியால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்ட காலமாக இருக்கும்.
இனிப்பை சாப்பிட்டால் ஆனந்தம் அடைவது எதனால் ?
நாம் விரும்பும் நபருக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம். உதாரணத்திற்கு நம் உறவினர் வீட்டின் குழந்தைகளுக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சிபடுத்துவோம். அதேபோல காதலிக்கும் பெண்ணுக்கு இனிப்பு சுவை கொண்ட சாக்லேட்டை இளைஞர்கள் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இனிப்பு சுவை எதைக் குறிக்கிறது. அது உடலுக்கு ஆனந்தத்தை தருகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக நாம் விரும்பும் நபருக்கு பாகற்காயை பரிசாக ஒருபோதும் கொடுக்க மாட்டோம்.
இவ்வளவு ஏன் அரை கசப்பாக இருக்கும் எந்த பழங்களையும் அல்லது காய்கறிகளையும் நாம் விரும்பும் நபருக்கு கொடுக்க மாட்டோம். இனிப்பு சுவை குருவின் ஆதிக்கம் கொண்டதா குருவே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாய் விளங்குகிறார். எல்லா உயிரினங்களும் விடும் மூச்சு தான் குரு. காற்று தத்துவம் கொண்டு குரு மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் மூச்சை கொடுக்கிறார், எனவேதான் குருவின் ஆதிக்கம் கொண்ட இனிப்பு சுவையும் மூச்சோடு கலந்து இருப்பதால் நமக்கு இயற்கையாகவே அந்த சுவையை பிடிக்கிறது.
மூளைக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடிய ரசாயனத்தை இந்த இனிப்பு சுவை நமக்கு வழங்குகிறது. அதுவே குருவின் ஆதிக்கத்தையும் உடையதாக இருக்கிறது. குரு நீச்சமான ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன் அவர்கள் அதிகமாக உணர்வுகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் கேட்டால் டயட் என்று கூறுவார்கள். அதேபோல் அவர்களுக்கு இனிப்பு சுவை சுத்தமாக பிடிக்காது. இப்படி இருக்கும் ஜாதகர்கள் நிச்சயமாக குருவின் தோஷத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சர்க்கரை வியாதிக்கு என்ன பரிகாரம்?
சர்க்கரை வியாதி என்பது வியாதி அல்ல. அது ஒரு குறைபாடு. தேவையான அளவுக்கு உணவுகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவை ரத்தத்தில் கட்டுப்பாடுடன் வைப்பது சிறந்தது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் குரு தக்ஷிணாமூர்த்தியை வழிபட அவர்களுக்கு நல்ல பலன் கை மேல் கிட்டும். உங்களுக்கு பிடித்த சித்தர்களையோ அல்லது குருமார்களையோ நீங்கள் வணங்கி வர சர்க்கரை வியாதியில் இருந்து சுலபமாக விடுபடலாம். நவகிரகத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவானை ஒன்பது வாரங்கள் தோறும் தீபம் ஏற்றி வர, சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும்.