மேஷம் :
மேஷ ராசியினருக்கு இந்த வாரம் பிரம்மாண்ட வாரமாக அமையும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி வரப்பெறும். ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்ந்துவிடும். ஆயுர்வேதம் உடலுக்கு ஏற்றதாக அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லவர்கள் நட்பு கிட்டும். சில காரியங்களை போராடி சாதிப்பீர்கள். மிகப்பெரிய பொருளாதார ஏற்றம் உண்டாகும். வைராக்கியத்துடன் சில காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் தான, தர்மங்கள் செய்வீர்கள். சத்காரியங்கள் அனைத்தும் பெரியளவு சுபிக்ஷத்தை தரும். இந்த வாரம் மிகவும் அருமையான வாரமாக அமையும். உங்கள் தான தர்மங்களின் பலன்களை அனுபவிப்பீர்கள்.
கடகம் :
வாகனங்கள் சார்ந்த முக்கியத்துவம் மிகுந்த நல்ல நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் அம்சங்கள் உண்டாகும். பல நுணுக்கங்களுடன் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம் :
பயணங்கள் வெற்றி பெறும். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான அழைப்புகள் வரும். மனமகிழ்ச்சி கிடைக்கும். செக் மூலமாக அல்லது இணையவழி மூலமாக பண வரவு உண்டாகும். இந்த வாரம் மிகவும் அமோகமான வாரமாக அமையும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வாரமாக இது அமையும். பெண்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய திட்டமிடல்களை இந்த வாரம் நீங்கள் எடுப்பீர்கள். சுபச்செலவுகள் உண்டாகும். திடீர் பணவரவு உண்டாகும். சந்தோஷமான நாளாக அமையும்.
துலாம் :
துலாம் ராசியினருக்கு மதிப்பும், மரியாதையும், கவுரவமும் கிடைக்கும் வாரம் ஆகும். இந்த வாரம் ஆலய திருப்பணி செய்வீர்கள். மனநிம்ம்தி அடைவீர்கள். அபார சக்தி கிட்டும். பெரிய விஷயத்தை கற்றுக்கொள்வீர்கள். இந்த வாரம் நீங்கள் சாதிப்பீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசியினர் சுபகாரியங்களுக்காக செலவு செய்வீர்கள். பெண்களுக்கு இரவு நேரங்களில் தூக்கம் கெடும். விரதத்தில் ஈடுபடுவீர்கள். விரதத்தின் பயனையும் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.
தனுசு:
பொருளாதாரத்தில் மேன்மை இருக்கும். சந்தோஷம் இருக்கும். திருப்தி இருக்கும். எல்லாவற்றிலும் வெற்றி பெறும் வாரமாக அமையும். நன்மைகள் பெருகும் வாரமாக இந்த வாரம் அமையும். எதிர்பார்த்த நற்செய்தி வரும். நம்பிக்கை அதிகரிக்கும் வாரம் ஆகும்.
மகரம் :
மகர ராசியினருக்கு பெரியளவில் வெற்றி உண்டு. பொருளாதார சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பணவரவுகள் உண்டாகும். முக்கிய ஆவணங்கள் விவகாரங்கள் இந்த வாரம் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேலோங்கும் அருமையான வாரமாக இந்த வாரம் ஏற்படும். திடீர் பணவரவும் வரும். நல்ல யோக்கியம் பெரும் நாள்.
கும்பம் :
கும்ப ராசியினருக்கு இந்த வாரம் மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். ஜெபித்தால் மகாலட்சுமியில் அனுகிரகம் கைகூடும். அதிர்ஷ்டம் கிட்டும், திடீர் வாய்ப்புகள் வரும். நற்செய்திகள் வரும். பிரயாணங்களால் வெற்றி கிட்டும்.
மீனம் :
மீன ராசியினருக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். முன்கூட்டியே சில விஷயங்களை செய்து முடிக்க வேண்டும். தெரு நாய்களுக்கு உணவளிப்பது நன்மை அளிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்