கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திபெற்றது உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் செய்யபட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இந்நிலையில்  காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மஹா சிவராத்திரியை  முன்னிட்டு உலக புகழ்பெற்ற  இமயமலையிலுள்ள  அமர்நாத் பனி லிங்கத்தை போலவே   தத்ரூபமாக அச்சு அசலாக அதனை பிரதிபலிக்கும் விதமாக  பனி லிங்கமானது அமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இமயமலை அமர்நாத் பனிலிங்கத்தை இதுவரையிலும்  நேரில் சந்திக்காதவர்கள் என காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சில மணி நேரம்  நீண்ட வரிசையில் காத்திருந்து தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த பனி லிங்கத்தை தரிசித்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.






அதிலும் குறிப்பாக அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க காடு மற்றும் மலை வழியாக பக்தர்கள் செல்வது போலவே  தத்துரூபமாக அதற்கான பாதை அமைக்கப்பட்டு பொது மக்கள்  பனி லிங்கத்தை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு புதிய புயல் நடன குழுவினர் சார்பில் அரங்கேறிய பல்வேறு  நடன கலை நிகழ்ச்சிகளையும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.



அதைப்போல காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் திருக்கோவில், ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் நேற்று நள்ளிரவு மகாசிவராத்திரி இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அங்காளம்மன் கோவில்களில் மயான சூறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.