வித்யதசமியில் நெற்மணிகளில் குழந்தைகளின் கையைப்பிடித்து அ என்று எழுத கற்றுக்கொடுப்பதால் குழந்தைகளின் கல்வி பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனை வித்யாரம்பம் என்று அழைக்கின்றனர்.


இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. இந்தியாவில் நவராத்திரி பண்டிகை  இந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது விஜயதசமியுடன் இன்று நிறைவடைகிறது. இவ்விழாக் கொண்டாடுவதற்கு பல்வேறு புராணக்கதைகள் கூறப்படுகிறது. குறிப்பாக  மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தப்போது,தனக்கு அழிவில்லாத வரம் வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் பிரம்ம தேவரோ இவ்வாறு எல்லாம் தர முடியாது என்று மறுத்த நிலையில், பெண்களால் மட்டுமே தனக்க அழிவு வர வேண்டும் என்று அசுரன் கேட்டுக்கொண்டாராம். ஏனென்றால் பெண்கள் எப்போதும் மென்மையானவர்கள் என்பதால் தனக்கு எப்போதும் அழிவு இருக்காது என்று எண்ணினான் மகிஷாசுரன்.





தனக்கு பிரம்ம தேவர் கொடுத்த வரத்தால் முனிவர்களையும்,  தேவர்களையும் துன்புறுத்தினார் அசுரன். இதனையடுத்து பெண்களால் தான் தனக்கு அழிவு வரும் என்ற வரம் இருப்பதால் பராசக்தியிடம் உதவியை நாடினர். இதையடுத்து மகிஷனுடன் போரிட ஆயுத்தமானாள் பராசக்தி. இவருக்கு சிவபொருமான் சூலத்தையும், விஷ்ணு பகவான் சக்கரத்தையும், அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுத்தையும் வழ்கினார். இவற்றைப்பெற்றுக்கொண்ட பராசக்தி 9 நாட்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் வந்து அசுரனைக்கொன்றார்.  அத்தனைய துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை இந்த நவராத்திரியின் 9 நாட்களிலும் வழிபடுகின்றனர். அதாவது, சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளிலும் பூஜித்து வழிபடுவர். நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படும்.


இதோடு அசுரனைக்கொன்ற இந்த 9 வது  நாளை வெற்றி நாளாகவும் கருதுகின்றனர். எனவே நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இன்று ‘விஜயதசமி’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த நாளில்  எந்த ஒரு காரியத்தையும் இந்த நாளில் தொடங்கினால், அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.





மேலும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி என புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் இந்த தினம் ஏற்றதாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகளவில் உள்ளது. இந்த நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது தொன்று தொட்டு ஐதீகமாக உள்ளது.