நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பதன் காரணம் என்ன? நம் குடும்பம் எப்போதுமே செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்ன்ற ஒரே ஒரு காரணத்தால் தான். நாம் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்திர படி இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் வாடகை வீட்டிலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலோ சில சமயங்களில் இதை நம்மால் சரி செய்ய முடியாது. அது போன்ற நேரங்களில் சில வழிமுறைகளை நாம் செய்வதன் மூலம் நம்மால் ஓர் அளவிற்கு நன்மை அடைய முடியும். பொதுவாக சமையலறை என்பது சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த ஒரு இடம். அங்கு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேன்மை அடையலாம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் நம் சமயலறையில் சில படங்களை வைப்பது மூலம் நம்முடைய செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்க முடியும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்