மனச்சோர்வு, நோய் நொடியின்றி மற்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு ஒவ்வொருவரின் வீடுகளிலும் சில வாஸ்து முறைகளைப்பின்பற்றலாம் என நம்பப்படுகிறது. வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகளை வெளியேற்றிவிட்டு நேர்மறை ஆற்றலை நாம் பெற முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.


இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரிய கட்டடக்கலையைக் குறிக்கும் விதமாக, வாஸ்து சாஸ்திரம் விளங்கிவருகிறது. பொதுவாக வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும் என்பதால், வீடு கட்டும் அனைவரும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீடுகளில் எப்போதும் அமைதி, மகிழ்ச்சி, சுகாதாரம், செல்வம் போன்றவற்றைப் பெற முடிவதாக நம்பப்படுகிறது. எனவே வீடு கட்டுவதற்கு முன்னதாக வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது மட்டுமில்லாமல் எப்போதும் நம் வீடுகளில் சில வாஸ்து முறைகளை பின்பற்றுவது என்பது நமக்கு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் என்னென்ன வாஸ்து முறைகளை நம் வீடுகளில் தினமும் பின்பற்ற வேண்டும் என்பதை நாமும் இங்கே அறிந்துகொள்வோம்.



வீடு மற்றும் வாசலை சுத்தமாக வைத்திருத்தல்:


நாம் வசிக்கும் வீடுகளை முதலில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் உள்புறம் மற்றும் வாசலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் வீடு மற்றும் மனதில் உள்ள நெகடிவ் எனர்ஜி வௌியேறுவதோடு பாசிடிவ் எனர்ஜியை நீங்கள் பெற முடியும். மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் அழகான கோலங்கள் இட்டு லட்சுமி தேவியை வரவேற்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது வீடுகளில் எப்போது நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.


கல் உப்பை வீட்டில் வைத்திருங்கள்:


வாஸ்து முறைப்படி உங்களது வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள் இல்லாமல் இருப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் கல் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு உப்பை எடுத்து  வீட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் வைத்துக்கொள்ளும் போது ஒரு வகையாக பாசிட்டிவ் எனர்ஜியை நாம் பெற முடியும்.


இதேப்போன்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி ஒரு எலுமிச்சை பழத்தைப்போட்டு வைக்கவும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழித்து நேர்மறை ஆற்றலைப்  பெறுவதற்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது


வீடுகளில் விளக்கு ஏற்வது:


வீடுகளில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் வீடுகளில் விளக்கு ஏற்றும் போது ஒரு புதுவிதமாக எனர்ஜியையும், மன நிம்மதியையும் நாம் பெறலாம். இதோடு வீடு முழுவதும் மங்களகரமாக இருப்பதால் நெகடிவ் எனர்ஜியை ஒரு போதும் நாம் நினைக்க மாட்டோம். எப்போது பாசிடிவ் வைப்ரேசனை நம்மால் பெற முடியும். எனவே முடிந்தவரை விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றி வைக்கவேண்டும் என நம்பப்படுகிறது



ஒவ்வொருவரின் வீடுகளின் முன்புறமும் கண்ணாடியை மாற்றி வைப்பது நல்லது. இது எதிர்மறை ஆற்றல வெளியேற்ற உதவியாக  இருக்கும். மேலும் வீட்டினுள் காற்றில் அசையும் மணிகளை கட்டி வைக்கலாம். காற்றில் மெதுவாக அசையும் மணி சத்தத்தின் ஓசை உங்கள் மனதை இனிமையாக்கும். பொதுவாக இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே  இதுபோன்ற மணியோசை உங்களது புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதேபோன்று உங்களது வீடுகளில் உங்களுக்கு பிடித்தமான சாமி புகைப்படங்கள், இயற்கைக் காட்சிகளை வைக்கலாம். இதோடு தினமும் வீடுகளில் மணம் தரும் பத்தி போன்றவற்றை ஏற்றும் போது மன நிறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது