மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியதாகும், தீராத நோய்களைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை கொண்ட தலமாக விளங்கி வருகிறது.
இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு திருவிழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அறிவுத்தலின்படி, தமிழக அரசின் கொரோனோ பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டு பக்தர்கள் அனுமதியின்றி குடமுழுக்கு விழா கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டு நடைபெற்றுள்ளது.