ராசிகளுக்கான இன்றைய பலன்கள்: 


சந்திராஷ்டமம்:


பூராடம், உத்திராடம்


மேஷம்: 


மேஷ ராசி நேயர்களுக்கு இன்று உதவிகள் கை கூடும் நாள். எங்கிருந்தோ ஒருவர் மூலம் உதவிகள் வரும். அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் பலன் பெறுவீர்கள்.


 


ரிஷபம்:


தனம் கூடும் நாள். வியாபாரம் இல்லை என்றாலும் தனம் கூடுவதற்கான வாய்ப்புகள் வரும். சில தடைகள் வரலாம். ஆனால் அது பனி போல் விலகும். தெய்வ வழிபாடு நல்ல பலன் அளிக்கும்.


 


மிதுனம்:


நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் மகிழ்ந்திருப்பீர்கள். விருந்து, விழா, நிகழ்ச்சி என இன்றைய நாள் மகிழ்ச்சியாகவே இருக்கும். சற்று கவனமாக வாகனங்களை இயக்கவும்.


 


கடகம்:


அனைவரிடத்திலும் பரிவாக நடந்து கொள்வீர்கள். அதே நேரத்தில் தேவையற்ற வாக்குறுதிகளை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதையும் அளவுடன் வைத்துக்கொள்வது உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. 


 


சிம்மம்:


இன்று எதையாவது உருவாக்க வேண்டும் என்கிற வேட்கையில் இருப்பீர்கள். அதற்கான சூழலும் அமையும். ஆனால் முன் கோபம் உங்களின் முயற்சிகளுக்கு தடையை ஏற்படுத்தும். அதை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மற்றபடி சிறப்பான நாளாக இருக்கும்.


 


கன்னி:


எதையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும் என நினைக்கும் நீங்கள், இன்று உங்களுக்கான பணிகளில் நிறைய கவனம் செலுத்துவீர்கள். பண விவகாரங்களில் அதீத கவனம் வேண்டும். பிறருக்கு ஆதரவாக கையெழுத்திடுவது போன்றவற்றில் அதிக கவனம் தேவை.


 


துலாம்:


வழக்கமான நாளிலிருந்து இன்றைய நாள் சவாலாகவே இருக்கும். தோல்விகள் தேடிவரும். அதிக கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகள், தேவையற்ற முடிவுகளை தவிர்க்கவும். இறை வழிபாடு பயன் தரும். 


 


விருச்சிகம்:


பெருமை உங்களை தேடி வரும் நாள் இன்று. என்று போல் இன்றும் பொறுமை கொள்க. வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. செய்த வேலைக்கு பலன் கிடைக்கும். பேச்சில் கவனம் இருந்தால், தேவையற்ற குழப்பங்களை தீர்க்கலாம். 


 


தனுசு:


மகிழ்ச்சி கூடி வரும் நாள். வீண் குழப்பங்களை தவிர்த்துவிட்டு மகிழ்வான சூழலை ஏற்படுத்துங்கள். வார்த்தைகளில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வருவாய் தொடர்பான மகிழ்ச்சியான தகவல் வரலாம். 


 


மகரம்:


பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். வீண் வம்புகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தாரிடம் கூட கோபம் காட்டாதீர்கள். தொழில் முடிவுகளில் அவசரம் வேண்டாம். வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளுங்கள். 


 


கும்பம்:


இன்றைய நாள் சோதனையான நாள். பல்வேறு சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கையால் அவற்றை கடக்க முயற்சிப்பீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்திட வேண்டாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.


 


மீனம்:


எந்த காரியம் செய்தாலும் தடங்கல் வரும். காலையிலேயே வீட்டில் இறை வழிபாடு நடத்திவிட்டு காரியங்களை தொடங்க முயற்சியுங்கள். தடங்கல் வருகிறதே என தவிக்க வேண்டாம். அதை திறம்பட கையாண்டால் வெற்றி கிடைக்கும்.