கெளரி நல்ல நேரம் :


அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி  


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடக்கூடாது. பொறுமையை கடைபிடிப்பதே மிகவும் நல்லது ஆகும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் போட்டிகரமான நாளாக அமையும். தொழில் மற்றும் பணியிடத்தில் போட்டிகள் உண்டாகலாம்.  நண்பர்கள் மத்தியில் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனம் தேவை.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். தொழில் மீது மிகுந்த ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அதிக அக்கறை ஏற்படும். குடும்பத்தினர் தொலைதூரப் பயணம் மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் வாங்க ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் கடினமாக அமையும். தேவையில்லாத குழப்பங்களை மனதில் நினைக்கக்கூடாது. கணவன் மனைவி இடையே தேவையில்லாத விவகாரங்களை பெரிதுப்படுத்தக்கூடாது. கடன் தொகை வசூலாவதில் தாமதம் ஆகலாம்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று தடங்கலான நாளாகவே அமையும். அதற்காக மனம் சோரக்கூடாது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகலாம். அதை ஒத்திவைக்க நேரிடலாம்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பொன்னான நாளாக அமையும். உங்களது மனக்குழப்பத்திற்கு தீர்வு கிட்டும். வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். நல்லதொரு இடத்தில் இருந்து பணிக்கான அழைப்பு வரும். சிவபெருமானின் துணையால் நன்மை பயக்கும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று மனதில் இனம்புரியாத கவலை உண்டாகும். பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. அக்கம்பக்கத்தினர் மற்றும் பணிபுரியும் இடங்களில் அனுசரித்து செல்வது நல்லது.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகுந்த போட்டி உண்டாகும். தொழிலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதிய ஆர்டர்கள் மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து அணுக வேண்டும். தேவையில்லாத விவகாரங்கள் பிரச்சினையாக தேடி வர வாய்ப்புள்ளது. அமைதியாக கையாள வேண்டும்.


தனுசு:


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று மனக்குழப்பம் உண்டாகும். சாய்பாபா அருளால் மனதில் அமைதி உண்டாகும். அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது. ஆண்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆக்கமான நாளாக அமையும். ஆக்கப்பூர்வமான சிந்தனையால் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பொன், பொருள் வீடு வந்து சேரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். வாழ்வின் முன்னேற்றத்திற்கு சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் ஆதரவு கிட்டும். சொத்துக்கள் பிரச்சினையில் நீடித்து வந்த பிரச்சினை தீரும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண