இந்தியாவின் முக்கிய கோயில் என நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோயில் பலருக்கு நினைவு வரும். அக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அதனைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். இந்நிலையில் திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவம் இன்று நடைபெற்றது.


 




இதனையொட்டி திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் சன்ன அதிகாலையில் திறக்கப்பட்டு, ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், அபிஷேக தூள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு ஆபரண அணிக்கலன்கள் அணிவிக்கப்பட்டு மற்றும் 
சிறப்பு மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டது. பின்னர் துர்க்கை அம்மன் கோவில் உள்ளே உள்ள கல்யாண மண்டபத்தில் துர்க்கை அம்மனுக்கு வேதாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க துர்க்கை  அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அருணாச்சலேஷ்வரர் கோயில் ஊழியர்கள் துர்க்கை அம்மனை தோலில் சுமந்து வர துர்க்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


 




 


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - எல்லை காவல் தெய்வ வழிபாடு நாளை முதல் தொடக்கம்


கொரோனா தொற்று காரணமாக துர்க்கை அம்மன் உற்சவம் மாடவீதியில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் சின்னகடைவீதியுள்ள துர்க்கை அம்மன் கோவில் பிரகாரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தற்போது கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக கோயிலுக்குள் கோவிலின் கட்டளை தாரர்கள் மற்றும்  உபயதாரர்கள் எனவும்  கோவிலில் குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து நாளை இரவு 8ம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய பிடாரி அம்மன் உற்சவம், நாளை மறு தினம் முதற்கண் கடவுளான விநாயக பெருமான் உற்சவம் நடைபெற உள்ளது.


 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - தடுப்பூசி சான்று, RTPCR சான்று அவசியம்