மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதுபோன்று இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். 




காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு... வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மனைவி... நொந்தவாசியான வந்தவாசி!


இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வருடாந்திர தை செவ்வாய் உத்ஸவம் கடந்த முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  


Crime | 3 நாட்களில் நிச்சயதார்த்தம்.. காதலனின் வெறிச்செயல்! தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்த பெண்..




அதனை அடுத்து நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம், காமதேனு வாகனம் என வீதிஉலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.


முன்னதாக வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார். 




டீ குடிக்க செல்வதையும் உடற்பயிற்சி கூடத்திற்கும் போவதையும் பார்க்கவா திமுகவுக்கு வாக்களித்தீர்கள்- ஈபிஎஸ் கேள்வி


தொடர்ந்து கோயில் தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய நான்கு வீதிகளில் வழியாக சென்று இறுதியாக கோயில் நிலையை அடைந்தது.


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்தத் தேர் திருவிழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறையினர் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலின் நான்கு வீதிகளிலும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண