அன்பார்ந்த வாசகர்களே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது.  அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பணம் தேவைப்படுகிறது.  இது போன்ற பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வருடத்தில் முக்கியமான நாட்கள் உண்டு.  ஆன்மீகத்தில் தெய்வங்களின் பாதங்களில் உங்களுடைய கோரிக்கைகளை சமர்ப்பிப்தற்காக, சில முக்கியமான நட்சத்திரங்களை தெய்வங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. 


அப்படி ஒரு அருமையான நட்சத்திரம்தான்  தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திரம்.  தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில், நீங்கள் முருகப்பெருமானுடைய பாதத்தில் நீங்கள் என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ, அதை அப்படியே அவர் நிறைவேற்றி கொடுப்பார் என்பது ஐதீகம்.  தற்போது  எந்தெந்த ராசிக்காரர்கள் தைப்பூசத்தில் என்னென்ன மாதிரியான வேண்டுதல்களை செய்ய வேண்டும்.  அந்த வேண்டுதல்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்.  உங்களை கோடீஸ்வரர் ஆக்குவதற்கு என்ன வழி  என்பதை ஒவ்வொரு ராசியாக தற்போது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேஷ ராசி :


உங்களுடைய ராசிக்கு இயல்பாகவே சனி பகவான் லாவாதிபதியாக வருகிறார். கடினமான உடைக்கக்கூடிய நீங்கள்  செவ்வாயினுடைய ஆதிக்கத்திலும்  உங்களுடைய லாபாதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியாக சனி ஆதிக்கத்திலும் வருகிறீர்கள். மற்றவர்களால் பெரிதாக கடினமான வேலையை செய்ய முடியவில்லை என்றாலும் மேஷ ராசி நபர்கள் அதை எளிதில் செய்து முடிப்பார்கள்.  அப்படிப்பட்ட நீங்கள்  பரிகாரமாக ஒன்றை செய்யுங்கள்.


உங்கள் ஊர்களில் அருகாமையில் ஏதேனும் மலை சார்ந்த பகுதி இருந்தால்,  அந்த மலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய கற்களை எடுத்து வந்து  சிறிய கூலாங்கற்களாகவும் இருக்கலாம் அல்லது மலையின் அடியில் இருக்கக்கூடிய தரையில் இருக்கக்கூடிய சாதாரண கற்களாகவும் இருக்கலாம்.  கையில் பிடிக்கின்ற அளவுக்கு சிறிய கல்லாக இருந்தாலே போதும்.  அந்த கல்லை எடுத்து வந்து  வீட்டில் உங்களுடைய பூஜை அறையில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். அந்தக் கல்லின் கீழே நீங்கள் ஏதேனும் உங்கள்  வீட்டில் இருக்கக்கூடிய பணத்தை வைத்து விடுங்கள். கல்லுக்கு கீழே பணம் இருக்கும் போது  அந்த பணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு நான்கு மடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும்.  இதை தைப்பூச தினத்தன்று  நீங்கள் முருகப் பெருமானை வணங்கி  கல்லுக்கு கீழே பணத்தை வைத்து  மனதார வேண்டினால் நிச்சயமாக அந்த பணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.


ரிஷப ராசி :


அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே  நீங்கள் இயல்பாகவே சுக்கிரனின் அம்சத்தை கொண்டவர்கள்.  உங்களுடைய வியாபாரிபதி குரு பகவான்  திடீர் அதிர்ஷ்டம் பணவரவு  போன்றவை உங்கள் ராசிக்கு இயல்பாகவே கிடைக்கும்.  நீங்கள் பரிகாரமாக தைப்பூசத்தன்று  கடையில் விற்கும் ஒரு பானையை வாங்கி வாருங்கள். அந்த பானைக்கு  வெள்ளை நிற வண்ணம் பூசி  அதனுள் பானைக்கு அடியில் சில  காசுகளை அடுக்கி வைத்து விட்டு அதன் மேலே பத்து ரூபாய் இருபது ரூபாய் 100 ரூபாய் என்று பணத்தை வைத்து விடுங்கள்  இதையும் பூஜை அறையில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். இப்படி வைப்பதன் மூலம் தைப் பூசத்தன்று முருகப்பெருமானுடைய அருளால் அந்தப் பானையில் இருக்கும் பணம் பன்மடங்கு உங்களுக்கு பெருகி உங்களை நிச்சயமாக கோடீஸ்வரராக மாற்றும்.


மிதுன ராசி :


மிதுன ராசி வாசகர்களே  உங்களுடைய வியாபாரிபதி செவ்வாய் அதாவது முருகப்பெருமான்.  நீங்கள் ஆன்மீக கடைகளுக்கு சென்று அங்கே விற்கும், முருகப்பெருமானுடைய கையில் இருக்கும் வேல்  வாங்கி வாருங்கள்.  பெரிய அளவிலான வேல் ஆக  இருக்கக் கூடாது. அது சிறிய அளவிலான  வேல்  ஆக இருக்க வேண்டும்.  மிகக்குறைந்த விலையில் ஆன்மீக கடைகளில் முருகப்பெருமானுடைய வேல் கிடைக்கும். அதைக் கொண்டு வந்து, வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானுடைய படத்திற்கு பக்கத்தில் வைத்து தைப்பூசத்தன்று பூஜை ஆரம்பித்து.  ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒன்பது வாரங்களுக்கு தவறாமல் நீங்கள் பூஜை செய்து வந்தால்  நிச்சயமாக நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்.


கடக ராசி :


கடக ராசி வாசகர்களே உங்களுடைய வியாபாரி வரி சுக்கிரன். சுக்கிர திசை வந்தால் கோடிகளில் உங்களை புரள வைக்கும் என்று பெரும்பாலானோர் சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய ராசிக்கு தான் உண்மையில்  சுக்கிரன் லாவாதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் வருகிறார்.  அப்படி என்றால்  நீங்கள் சுலபமான ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும்.  வீட்டை தினமும் தவறாமல் சுத்தம் செய்து  வீடு முழுவதும் வாசனையுள்ள மலர்களால் அலங்கரிக்க வேண்டும். 


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மல்லிகை பூ வாங்கி வாருங்கள். பெரிய அளவில் எல்லாம் வேண்டாம் ஒரு முழம் இருந்தாலே போதும்.  அந்த மல்லிகை பூவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பூஜை அறைகளில் நான்கு மூலைகளிலும் வைத்து விடுங்கள்.  மீதம் இருக்கும் மல்லிகை பூவை ஹால், பெட்ரூம் போன்ற இடங்களில் வைத்து விடுங்கள்.  வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு  மகாலட்சுமிக்கு பூஜை செய்துவர  உங்களுடைய வங்கிக் கணக்கில் சேமிப்பு நிச்சயமாக உயரும் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள் இந்த பூஜையை தைப்பூசத் தினத்தன்று ஆரம்பித்தால் வெற்றி உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.