நாள்: 22.05.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
இராகு :
காலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை
குளிகை :
காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் தன்னிச்சையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளில் மகிழ்ச்சியடைவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று எல்லா செயல்களிலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். இன்று வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் பிறருடன் பேசும் போது கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று மந்தமான நாளாக இருக்கும். கையாள்வதற்கு கடினமான கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும்.இதனை சமாளித்து உறுதியுடன் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல உறுதி செய்து கொள்ளுங்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று வெற்றிகரமான பலன்கள் காணப்படும். இதனால் உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற இயலும். கவனம் மற்றும் உறுதியுடன் செயல்பட்டால் உங்கள் வளர்ச்சி மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சாதகமான பலன்கள் காணப்படும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று எல்லா செயல்களிலும் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. உங்கள் இலக்குகளை முடிப்பதில் சில கடினங்கள் காணப்படும். மனதை அமைதியாக வைத்து கவனமுடன் செயல்பட்டால் நன்மை விளையும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று விருப்பமான பலன்கள் கிடைக்க சாதகமான நாள் அல்ல. என்றாலும் உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தும் புதிய திறமைகளை கற்கலாம். நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக நடக்கலாம்என்பதால் அவர்களிடம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களிடம் மகிழ்ச்சியான எண்ணங்களும் செயல்களும் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அமைதி காணலாம்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டியிருக்கும். இன்று நீங்கள் அதிகம் எதிர்பார்க்க இயலாது.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்களுக்கு கவலை அளிக்கும் வகையிலான சூழ்நிலைகள் இன்று காணப்படும். உணர்ச்சிக் கட்டுப்பாட்டை பராமரித்தலும் சமநிலையோடு இருத்தலும் நல்ல பலனளிக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று ஓய்வெடுங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று மந்தமான நிலை காணப்படும். உங்கள் செயல்களில் விழிப்புணர்வு தேவை. இன்று நன்மை காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதற்கும் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும் தேவையான உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்