நல்ல நேரம் :


 காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


சூலம் – வடக்கு


 


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுககு வேலை புரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வரன்கள் வாயில் வந்து சேரும். காதல் திருமணத்தில் முடிவதற்கான அம்சங்கள் பிறக்கும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே  இன்று உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக உடலில் நீடித்து வந்த ஆரோக்கியம் தொடர்பான சிக்கல் இன்று முழுதாய் குணமடையும். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடைபெறும். சொத்துக்கள் வழி பிரச்சினைக்கு நல்ல முடிவு கிட்டும்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். வேலை தொடர்பாக எழுதிய முக்கிய தேர்வுக்கு நல்ல தேர்ச்சி கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. தொலைபேசி வழி மூலமாக மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். நீண்ட நாட்களாக மனதில் நீடித்து வந்த குழப்பம் அகலும். தொழில் மற்றும் வாழ்க்கைத்துணை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்களுடனான கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் வந்து சேரும், தொழிலில் மற்றும் வியாபாரத்தில் உங்களது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்களது மதிப்பு உயரும்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். பாசத்திற்குரியவர்களின் பாசத்தை உணர்வீர்கள். நண்பர்களுடன் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த சம்பள அறிவிப்பு கிட்டும். மன தைரியம் அதிகரிக்கும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை நடக்கும். இத்தனை நாட்கள் நீங்கள் வேண்டியது உங்களுக்கு கைகூடும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மணமகன்களுக்கு மணமகள் தேடிய பெற்றோர்களின் கவலை தீரும். விநாயகப்பெருமானை வழிபட்டு மேலும் சிறப்படைவீர்கள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களது முயற்சி திருவினை ஆகும். உங்களது தொழிலில் அமோக முன்னேற்றம் காண்பீர்கள், உங்களது திறமையை பலரும் பாராட்டுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும்.


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு உண்டாகும். குடும்பத்தில் நீடித்து வந்த பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும். சகோதரர்கள் இடையே நீடித்து வந்த பிரச்சினை தீரும். உயர்ந்த இடத்தில் இருந்து வேலைவாய்ப்பு கிட்டும். நல்லவர் நட்பு கிட்டும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி நீடித்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைய புதிய முயற்சி எடுப்பீர்கள். புது தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணிபுரியும் இடங்கள், அக்கம்பக்கத்தினர் மத்தியில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாத வாதங்களில் ஈடுபடக்கூடாது. அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண