வருகின்ற சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.
மிதுன ராசி நேயர்களே!
உங்களுக்கு பயங்கரமான சந்தோஷம், மகிழ்ச்சி ஏற்படும் நல்ல காலம் இது. அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவீர்கள். உங்களை நம்பாதவர்கள் நம்பத் தொடங்கிருப்பார்கள். வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்கள் காணக்கூடிய நல்ல காலம் வந்துவிட்டது.
மிகப்பெரிய ஆட்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் உயர் பதவிகளில் அமருவீர்கள், மூத்த சகோதரன், சகோதரிகளின் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டாலும், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டாலும் உங்கள் வாழ்க்கையில் 50 மடங்கு வளர்ச்சியைப் பார்ப்பீர்கள்.
செவ்வாய் உடைய வீட்டில் குரு - ராகு சஞ்சாரம் என்றால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இது மிகையல்ல... மிகப்பெரிய வீடு, வாசல், வண்டி , சொத்து வரும். நினைத்த காரியங்கள், ஆசைகள், அபிலாஷைகள், தீராத ஏக்கங்கள் நிறைவேறக்கூடிய பாக்கியம் மிக மிக அதிகம்.
4ஆம் இடத்தில் புதன் உடைய வீட்டில் கேது பிரவேசம் செய்யும்போது பெரியவர்களின் உடல்நிலையில் அக்கறை தேவை. உங்களுக்கு நெஞ்சுப் பகுதியில் சிறு சிறு பிரச்னைகள், அஜீரணக்கோளாறுகள் ஏற்படலாம். உங்கள் திட்டங்களை வெளியே சொல்லாமல் இருந்தாலே வெற்றி நிச்சயம்.
ராகு உங்களுக்கு மிகப்பெரும் ஆற்றலைக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய பெரிய வேலைகள், டாக்டராவது, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது ஆகியவை நடக்கலாம்.
விமானப் போக்குவரத்து ஏற்படும். நீங்கள் நினைத்துப் பார்த்திராத பெரிய இடங்களில் போய் அமரும் வாய்ப்பு உண்டு. திருவாதிரை, புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு அபரிமிதமான லாபம் உண்டு. ஏனென்றால் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு 100 சதவீதம் நல்ல முன்னேற்றங்கள் உண்டு.
மிருகசிரீஷ நட்சத்திரக்காரர்களுக்கு மிக மிக நல்ல யோக காலமாக இருக்கும். செவ்வாய் வீட்டில் குரு - ராகு வந்தால் நல்ல யோகம் உள்ளது. பெண்களுக்கு மன மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
கோபாலகிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று பசு நெய் தானம் செய்வது நல்ல திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். கண்டங்களில் இருந்து தப்பிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயங்கர மழையிலும் இந்தப் பரிகாரத்தினால் உங்களுக்கு குடை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: Tamil New Year Simmam Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களே... பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசம்.. உங்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் இதோ..