சந்திரன் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களை கடந்து, பௌர்ணமி, அமாவாசை என்கிற இரு திதிகளை சேர்த்து ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக மறைந்து விடும் தினமான அமாவாசை தினம், பல ஆன்மீக செயல்களை செய்வதற்கு ஏற்ற தினமாக இருக்கிறது. அப்படியான ஒரு மிகச் சிறப்பான தினமாக வைகாசி அமாவாசை தினம் வருகிறது. பல ஆன்மீக செயல்களை செய்வதற்கு ஏற்ற தினமாக இருக்கிறது. அமாவாசை என்பதே முன்னோர்களுக்கான நன்னாள்தான். இந்தநாளில், முன்னோரை நினைத்து அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரிப்பதும் தூபதீபங்கள் காட்டி ஆராதனை செய்வதும், மிகவும் பலன் தரும் என்பது ஐதீகம்.
வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். வருடத்திற்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு மாதமும் பிறக்கிற தமிழ் மாதம், கிரகணங்கள், புரட்டாசி மகாளய பட்சத்தின் காலங்கள் என முன்னோரை வழிபடுவதற்கு உரிய நாட்களாக, முக்கியமான நாட்களாக, முன்னோர்களுக்கான நாட்களான 96 நாட்கள் இருக்கின்றன. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் இன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் இந்த அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இந்த மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும். சுபிட்சங்கள் பெருகும்.
வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும். சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும். மேலும், முன்னோரை நினைத்து, உங்களால் முடிந்த அளவுக்கு, ஒரு நான்குபேருக்கேனும் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள் வீட்டில் இதுவரை இல்லாத நிம்மதியும், சந்தோஷமும் இனி குடியேறும். தம்பதியர்களின் ஒற்றுமை மேலோங்கும் தரித்திரம் விலகும் என்று நம்பப்படுகிறது.