சனி பகவான், மற்ற கிரங்களை போல் அல்லாமல் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி. இவர் தற்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்கிறார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பம் ராசிக்கு செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தன் சொந்த ராசியான கும்பத்திற்கு வருகிறார். மீண்டும் வக்ர பெயர்ச்சியாக மகர ராசிக்கே திரும்புகிறார். அதிசார சனி பெயர்ச்சி சொல்லும் பலன்கள் என்ன? (Sani Peyarchi 2022 Palangal in Tamil)


மேஷ ராசி அன்பர்களே!


சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதாகவே இருக்கும். பொருளாதார நிலை உயரும். பணி வகையிலான வாய்ப்புகள் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். கவனத்துடன் உங்கள் திட்டங்களை செயல்படுத்தினால் உங்களுக்கு வெற்றிதான்.


ரிஷப ராசி அன்பர்களே!


ரிஷப ராசிக்கு பாக்கிய அதிபதியாகவும், தொழில் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். ராசிக்கு 10ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்ய உள்ளார். 10ம் வீட்டில் ஏதேனும் ஒரு அசுப கிரகமாவது இருந்தால் அவர் தொழில், உத்தியோகத்தில் பெரிய நிலையை அடைவார்.


கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. தொழில் ரீதியிலாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். உங்கள் தொழில் ரீதியிலாக நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது. சுப செலவுகள் அதிகரிக்கக் கூடும். மன தைரியம் அதிகரிக்கும். இதனால் உங்கள் முன் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய பயம் அவசியம் இல்லை. உங்களுடைய சோம்பலை ஒழித்துவிட்டால் உங்களுக்கு லாபம்தான். உங்கள் வளர்ச்சிக்கான காலம் இதுதான். ஏனெனில், சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களின் நண்பர்.


மிதுன ராசி அன்பர்களே!


பிரச்சனைகள், கடன் தீரும் காலம் இது. மிதுன ராசிக்கு நடந்து கொண்டிருக்கின்ற அஷ்டம சனிக்கு ஒரு சிறு இடைவேளை விடுவது போல, இந்த அதிசார சனி பெயர்ச்சியால் 75 நாட்கள் அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய வாய்ப்புகள் உருவாகும். சொத்து பிரச்சனை நீங்கும்.  இந்த நாட்களில் உங்களுக்கு மன தைரியம் கூடும். நல்ல லாபகரமான நாட்கள் உங்களுக்காக காத்திருகிறது. தொழில் ரீதியில் பல நன்மைகள் நடக்க இருக்கிறது.


கடக ராசி அன்பர்களே!


உங்களுக்கு நோய் நொடி ஏற்படுவது குறையும். பிரச்சைகள் தீரும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலம்தான். வாய்ப்புகள் கிடைப்புகள் தடை ஏற்பட்டாலும், உங்கள் திறமையினாலும், தெளிவான சிந்தனையினாலும் வெற்றி அடைவீர்கள். அவ்வபோது பிரச்சனைகள் இருந்தாலும், நிம்மதியா நாட்கள் உங்களுக்கு கிடைக்கும்.


சிம்ம ராசி அனபர்களே!


உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உங்களுடைய தொழில் மேம்படும். கடினமாக உழைத்தால் மட்டுமெ வெற்றி என்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய பிரச்சனைகள் மற்றும் இடர்களை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு கிட்டும். மேலும், இந்தக் காலம் உங்களுக்கு அவ்வளவு மோசமான காலம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


கன்னி ராசி அன்பர்களே!


 உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வேலை தொடர்பான தடை, எதிரிகள் தரக்கூடிய பிரச்சினைகள் குறையக்கூடிய காலமாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும் காலம் உங்களுக்கு திரும்புகிறது.


துலாம் ராசி அன்பர்களே!


துலாம் ராசி அதிபதியான சுக்கிரனின் நட்பு கிரகமான சனி ராசிக்கு 4 மற்றும் 5ம் வீட்டு அதிபதி ஆவார். சொத்து வாங்குதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்ட சுப செலவுகள் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு இந்தக் காலம் பல நன்மைகளை அளிக்கும் விதமாக இருக்கும்.


விருச்சிக ராசி அன்பர்களே!


உங்களுக்கு சொல்லில் செயலில் கவனம் தேவை. பணியிடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாத சிந்தனைகளை விட்டுவிடுகள். சனி 4-ல் இருப்பதால் தொழில் அலைச்சல் மற்றும் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால், உங்களின் திட்டமிட்ட செயல்களால் உங்கள் பண வரவு வந்து சேரும்.


தனுசு ராசி அன்பர்களே!


உங்களுக்கு இதுவரை நடந்து வந்த ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனி முடிந்துவிட்டது. உங்கள் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். உங்களின் முயற்சிகள் கைக்கூடும். தொழில் லாபகராமாக நடக்கும். பண வரவு காத்திருக்கிறது. அலைச்சல், பிரச்சினைகள் குறைய இருக்கிறது. எல்லாம் சரியாகி நன்மைகள் நடக்கும் காலமிது.


மகர ராசி அன்பர்களே!


பண வரவு உண்டு. கடல் கடந்து வாணிபம் செய்யும் வாய்ப்புகள் இருக்கிறது. பெயரும் புகழும் உங்களை வந்தடையும். உடல்நலன் மேம்படும்.


கும்ப ராசி அன்பர்களே!


உங்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கிறது. பணியிட முன்னேற்றம் உங்களைச் சேரும். இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு எவ்வித இடர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பயப்பட வேண்டாம். தனம், தானம் என எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகள் வந்து சேர இருக்கிறது. தினமும் குலதெய்வ வழிபாடு உங்களை இன்னும் மேம்படுத்தும். உங்கள் வாழ்வில் வளர்ச்சி பெறும் காலம் இது. சந்தோஷமும் நன்மைகள் ஏற்படும் காலமிது.


மீன ராசி அன்பர்களே!


இந்த காலத்தில் உங்களுக்கு ‘சோம்பி திரியேல்’ என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். 12-ல் சனி வரும்போது, உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனாலும்,இது மகிழ்ச்சியான காலம்தான். உங்களுக்கு பணச் சிக்கலை சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். ஆக, கவலை வேண்டாம். நல்லகாலம்தான் உங்களுக்கு!


 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண