அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே  ரிஷப ராசிக்கு 2024 ஆம் ஆண்டு  வருடத்தின் முதல் 90 நாட்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.


வீடு, மனை வாங்க உகந்த நேரம்:


வருட ஆரம்பமே உங்களுக்கு சில விஷயங்களில் ஏற்றமாக இருக்கப் போகிறது உதாரணமாக  வீடு மனை வாங்க சிறந்த நேரம்,  புதிதாக வண்டி வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.  நீண்ட தூர பிரயாணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்த உங்களுக்கு இது ஒரு பொன்னான காலம்.  இருக்கும் இடத்தை விட்டு வெகு தூர பிரயாணம் சுப காரிய செலவு,  மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் என்று வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாகவே அமையும்.  எதிர்பார்த்த பண வரவு தாராளமாக அமையும்.  திடீரென்று பண வரவு உங்களுக்கு வந்து உங்களை திக்கு முக்காட வைக்க போகிறது.


ரிஷப ராசிக்கு 12ஆம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். பத்தாம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருக்க 11ஆம் இடத்தில் ராகு அமர்ந்திருக்கிறார்.  ராகு பகவான் செல்வங்களை வழங்கவிருக்கிறார். பதினோராம் இடம்  லாபங்களை வழங்கக்கூடிய இடமாக இருப்பதால் நிச்சயமாக ரிஷப ராசி வாசகர்களுக்கு 90 நாட்களும் பொன்னான காலம். இந்த டிஜிட்டல் உலகில் ராகுவே ஆட்சி புரிகிறார். அப்படி என்றால் நீங்கள் ஒரு பொருளை வியாபாரம் செய்ய வேண்டுமானால் அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதன் மூலம் நிச்சயமாக பிரபல்யமான முன்னேற்றத்தையும் லாபத்தையும் உங்களால் பெற முடியும்.


விநாயகருக்கு நெய் தீபம்:


பதினோராம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்க ஐந்தாம் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறார். எண்ணங்களில் தெளிவு சிந்தனை பெற வேண்டும். அப்படி என்றால் மற்றவர் உங்களிடம் பேசும் பொழுது நீங்கள் எதை பேச வேண்டும் என்று சிந்தித்து பேசுவது நல்லது விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.  ஐந்தாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் உங்களுடைய இடத்தை விட்டு வேற இடத்திற்கு நகர்த்தி செல்வார் குறிப்பாக நீங்கள் சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் ஸ்தானம் என்பது உங்களுடைய ஆற்றல் குறைவு பட வாய்ப்புள்ளது.  ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் ஏழு மணி வரை அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு நெய் தீபம் போட்டு வர உங்களுடைய பிரச்சனைகள் விலகி  மகிழ்ச்சி உண்டாகும்.


சனிபகவான் பத்தில் அமர்ந்திருக்கிறான் பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று மூல நூல்கள் கூறுகின்றன. அப்படி என்றால் சனி பகவான் தொழில்காரகன் கால புருஷ தத்துவத்திற்கும் சனி பகவான் தொழில்காரனாக வருகிறார் அதேபோல ரிஷப ராசிக்கும் சனி பகவான் தொழில்காரனாக வருகிறார்  ரிஷப ராசி பொருத்தவரை சனிபகவான் நல்ல இடங்களில் அமரும்போது பெரிய முன்னேற்றத்தை கொண்டு வருவார் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை.


ஏறுமுகம்தான்:


குறிப்பாக எந்த ரிஷப ராசி வாசகர்களுக்கு சனிபகவான் பிறந்த ஜாதகத்தில் மகரத்திலோ கும்பத்திலோ அல்லது துலாத்திலோ அமர்ந்திருக்க அவர்களுடைய தற்போது வாழ்க்கை மிகவும் ஏற்றமாகவே இருக்கும் இரண்டரை வருட காலங்கள்  சனிபகவான் கும்ப ராசியிலே அமர்ந்து உங்களுடைய தொழில் ஸ்தானத்தை விரிவுபடுத்தப் போகிறார்.  சனி பயணம் செய்யும் மூன்று நட்சத்திரங்களில் அனைத்து நட்சத்திரங்களுமே உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன குறிப்பாக ரிஷப ராசிக்கு 11ஆம் இடமான குரு பகவானுடைய நட்சத்திரத்தில் சனிபகவான் பிரயாணம் செய்யும் காலங்களில் அதிகமான நன்மையை பெறப் போகிறீர்கள்.


வீடு வண்டி வாகனம் வாங்கி மகழக்கூடிய காலமாக இந்த காலகட்டம்  அமையப்போகிறது. குறிப்பாக புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று காத்திருப்போர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நிச்சயமாக வெற்றியை பெறுவீர்கள்.  பழைய வீடு நிலம் மனை போன்ற விற்பனைக்கு நீங்கள் கொண்டுவந்து அதை விற்பதன் மூலமாக வேறு ஒரு நிலத்தை வாங்க போகிறீர்கள்.  ஐந்தாம் இடத்துக்கு ஏது பகவான் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்யப் போகிறார் குறிப்பாக சூரியனின் உத்திர நட்சத்திரம் சந்திரனின் அஸ்த நட்சத்திரம் மற்றும் செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரங்களின் கேது பகவானுக்கு பிடித்த நட்சத்திரங்கள் தான் எனவே ரிஷப ராசிக்கு ஐந்தாம் பாவத்தில் எந்தெந்த நட்சத்திரங்களில் கேது பயணம் செய்தாலும் அது பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து தரும்.


மிகப்பெரிய வெற்றி:


ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியான சூரிய பகவான் மூன்று வீடுகளில் பிரயாணம் செய்யப் போகிறார்.  ரிஷப ராசிக்கு மார்கழி மாதத்தில் சூரிய பகவான் எட்டாம் வீட்டில் பிரயாணம் செய்கிறார் அந்த காலகட்டத்தில் மட்டும் வீடு வண்டி வாகனத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அதேபோல தை மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு 9 ஆம் வீட்டில் பரிகாரம் செய்யப் போகிறார். அந்த காலத்தில் எண்ணியங்கள் அனைத்தும் ஈடேறி உங்களுக்கு சகலமும் நன்மையாக முடியும்.


அதேபோல கும்ப ராசியில் சூரிய பகவான் பிரயோசிக்கும் காலம் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் வெற்றியை கொண்டு வந்து தேடிக் கொடுக்கக்கூடிய  ஸ்தானம்.  பத்தாம் பாவத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் ஏற்கனவே அந்த வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். அப்படி என்றால் தொழில் காரகனும் அரசராகிய சூரியனும் தொழில்ஸ் ஸ்தானத்தில் அவரும் பொழுது நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறீர்கள்.