அன்பார்ந்த abp நாடு வாசகர்களே,


திருமணங்கள் சொர்க்கத்தில் நீட்சிக்கப்படுகின்றன என்று  பெரியவர்கள் சொல்வார்கள். பொதுவாக  நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்  நல்லபடியாக முடிந்து  மணமக்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.  ஆனால் சில திருமணங்களை பார்த்தால்  அவை மிகுந்த பரபரப்புக்குள்ளாகி பின்னர்  ஒரு வழியாக நடந்து முடிந்து விடும். 


திருமணம்:


ஆனால் நாம் பார்க்கப் போகின்ற தலைப்பின் கீழ் உள்ள ஜாதகங்கள்  வரன்களை பார்த்துவிட்டு வந்த பின்பாக திருமணங்கள் நடக்காமல் நின்று போய்விடும். கிட்டத்தட்ட யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பது அந்த வரன்களுக்கு தெரிந்து விடும். ஆனால்  திருமண மேடை வரை செல்லாமல் அவை பாதியிலேயே ஏதோ ஒரு காரணத்திற்காக நின்று விடும்.


திருமணம் பாதியிலேயே நின்று போவதற்கு பல காரணங்கள் உண்டு. பெற்றோர்கள், அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படுதல் அல்லது  ஆண், பெண் இருவருக்குள் ஏதாவது பிரச்சனை ஏற்படுதல் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என  திருமணங்கள் நின்று போவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. இன்னும் சில இடங்களில் வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் இருந்து அவை திருமணம் வரை செல்லாமலேயே அப்படியே நின்று விடுகின்றன.  இது போன்ற காலகட்டத்தில் உண்மையாகவே அந்த ஆண் அல்லது பெண்  அவர்களுக்கு பார்த்து வைத்திருக்கின்ற வரன்களை  விரும்ப ஆரம்பித்து விட்டால், நிச்சயமாக சிக்கல்தான் எழும்பும் காரணம் திருமணம் நடைபெற போவதில்லை. ஆனால் அந்த வரன்களை அந்த  சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அவை கொடுமைதான்.


புனர்பூ தோஷம்:


இருவருக்கு திருமணம் முடிவு செய்து, நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நடைபெறாமல் போவதற்கு புனர்பூ தோஷம் என்று பெயர்.  இவை சனி+சந்திரன்  இணைவால் ஏற்படுகிறது.  புனர்பு தோஷம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம். முதலில் ஒரு ஆண் ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவருடைய ஜாதகத்தில் மகரத்தில் சனி இருக்கிறார். அதே மகரத்தில் சந்திரன் இருக்கிறார் என்று வைத்தால், அந்த ஜாதகருக்கு புனர்பூசம் இருக்கிறது என்று அர்த்தம்.  இப்படிப்பட்ட வரன்களுக்கு நிச்சயமாக ஒரு திருமணம் தள்ளிப்போய்  மறுவரன் பார்த்து திருமணம் செய்கின்ற யோகம் அடிக்கும்.


அப்படி இல்லை என்றால் அந்த ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருப்பார், அந்த காதல் திருமணம் வரை கைகூடாமலேயே போய்விட்டு பின்  பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்ய வாய்ப்பு உண்டு.  அப்படியும் இல்லை என்றால் அந்த ஆண், அந்த பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்து பெற்றோர்கள் சம்மதிக்காமல் ஒரு கட்டத்தில் பெண் வீட்டார் சம்மதிக்காமல் இருக்கும் நிலையில்,  அவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள வாய்ப்புண்டு.  இப்படியான சூழ்நிலையிலும் இருவர் இணைவார்கள். ஆனால் அது இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருக்காது.


எல்லோருக்கும் புனர்பூ தோஷம் உண்டா?


ஒவ்வொரு ஜாதகத்திலும் விதி இருப்பது போல விதி விலக்குகளும் உள்ளது. அப்படி என்று பார்த்தால்  சனிச்சந்திரன் இணைவு மட்டும் புனர்பூ தோஷத்தை உருவாக்காது. சனியும், சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தொடர்பு தோஷத்தை உருவாக்கும். உதாரணத்திற்கு மகரத்தில் சனி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால், கடகத்தில் இருக்கின்ற சந்திரன் சனியை பார்ப்பார். சனியும் சந்திரனை பார்ப்பார். இப்படியான சூழ்நிலையில் புனர்பு தோஷம் உருவாகும்.  இந்தப் புணர்வு தோஷம் நிச்சயமாக  திருமணத்தை நிறுத்தும் என்று நான் கூறவில்லை. ஆனால் சொன்ன தேதிக்கு திருமணம் நடக்காமல் வேறு தேதியில் மாற்றி வைத்திருக்கலாம்.  அல்லது ஒருவரிடம் இரண்டு வருடம் கழித்து  அவர்களே  மறு திருமணம் செய்து கொள்ளலாம் .
எல்லோருக்கும் நிச்சயமாக சனி சந்திரன் சேர்ந்து இருக்கிறவர்களுக்கு புனர்பூசம் உருவாகும் என்று நான் கூறவில்லை. இது பொது விதிகளை தவிர அவரவர் சொந்த ஜாதகத்தை பார்த்து தான் விதி எது? விதிவிலக்கு எது? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  மீண்டும் ஒருமுறை தொடர்பு தோஷம் பற்றி கூறுகிறேன். ஒரு ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் சனி சந்திரன் இணைவு அல்லது பார்வை புனர்பூ தோஷத்தை உருவாக்கும். அப்படி உருவாக்கப்பட்ட புனர்பூ தோஷங்கள் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் திருமணம் வரை சென்று,  திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போவது அல்லது திருமணம் பாதியிலேயே நின்று விடுவது அல்லது  ஒருவரை பார்த்து வேறு ஒரு வரனுக்கு மணம் முடிப்பது  அல்லது திருமணம் நடைபெறாமல் காலம் தாழ்த்தி திருமணம் நடைபெறுவது.  சிலருக்கு திருமணம் நடைபெற்று ஆண் சம்பாதிப்பதற்காக அயல்நாடுகளில் வசிப்பது போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.  


புனர்பூ தோஷத்தை பொறுத்தவரை பெரியதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது ஆனால் சில மனக்கசப்புகள் திருமணம் தொடர்பாக ஏற்படுத்தும் என்பது தான் உண்மை . இதுபோன்று பல விதிகள் புனர்பூ தோஷத்தில் அடங்கும்.  இதற்கு பரிகாரம் என்று பார்த்தால்  நிச்சயமாக வலுவான புனர்பூசம் இருப்பவர்கள்  திருமணம் தள்ளிப் போய், பிறகு திருமணம் செய்து கொள்வதே பரிகாரமாக தான் அமையும்.  அப்படி செய்து கொண்டவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும், செழிப்பும் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்…