இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 04 2025: 


அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 


 

ரிஷப ராசி

 

உத்தியோக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். மூத்த உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

 

மிதுன ராசி

 

நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள்.

 


 


 

 கடக ராசி

 

கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். விவேகம் வேண்டிய நாள்.

 

 சிம்ம ராசி

 

மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கணவன், மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


 

 

 கன்னி ராசி

 

தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

குழந்தைகள் வழியில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கலை சார்ந்த பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான நிலைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

 

விருச்சிக ராசி

 

மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். புது விதமான சிந்தனைகள் மனதில் உருவாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். தடைப்பட்ட தன வரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

 

தனுசு ராசி

 

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

 

மகர ராசி

 

வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் அறிமுகங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

 

கும்ப ராசி

 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள்.

 

மீன ராசி

 

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். சலனம் நிறைந்த நாள்.